பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாவளுர் $25

தலபுராணங்களை இலக்கிய நயங்கருதிப் படித்தின்புறுதற் குரிய நூல்களெனக் கொள்வதன்றிப் பழந்தமிழ்ப் புலவர் களது உண்மை வரலாற்றினை யுணர்தற்குத் துணைபுரியும் நூல்களெனக் கொள்ளுதற்கில்லை.

நக்கீரர் பாடியனவாகப் பதினுெராந் திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவது பிரபந்தமாக அமைந்தது திருமுருகாற்றுப்படை. சங்கத்துச் சான்ருேர் இப்பாட்டினைப் பத்துப் பாட்டில் முதலாவது பாட்டாகக் கோத்தமைத்துள்ளார்கள். இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரனுராவர். ந என்பது சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல். கீரன் என்பதே இவரது இயற்பெயர். இதன்முன் நல் என்னும் அடைமொழி புணர்த்து நற்கீானர் என வழங்கு தல் பிற்கால வழக்காகும். நக்கீரர் பாடியனவாகப் பத்துப் பாட்டுள் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வா.ை என இரண்டு பாடல்களும், எட்டுத்தொகையில் முப்பத்து நான்கு தனிப்பாடல்களும் கிடைத்துள்ளன. இறையனரகப் பொருளுக்கு முதலுரை கண்டவர் இவரேயெனக் களவிய லுரை கூறும். கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டெனக் கொள்ளுதல் பொருந்தும்.

நக்கீரனர் பாடிய திருமுருகாற்றுப்படைக்கும் பதி ஞெராந் திருமுறையில் நக்கீர தேவர் பாடியனவாகக் குறிக்கப்பட்ட ஏனை ஒன்பது பிரபந்தங்களுக்கும் சொல் வழக்கும் பொருளமைதியும் வரலாற்று நிகழ்ச்சிகளும் முற்றிலும் வேறுபட்டுள்ளன.

திருமுருகாற்றுப்படையில், கோபம், அங்குசம் முதலிய ஒருசில வட சொற்களே அருகிக் காணப்படுகின்றன. கயிலை பாதி காளத்திபாதியந்தாதி முதலிய ஏனைய ஒன்பது பிரபந்தங்களிலும் அர்ச்சனை, அலங்கரித்து, இரவி, இலக்கியம், இலிங்கம், உன் றனக்கு, ஓங்காரம், கங்காளர், கதை, கரம், காகோதரம், காமாதி, கோபப் பிரசாதம், சங்கரன், சடலம், சரணம், சாதி, சித்திரம், சிரம், சுந்தர விடங்கன், தக்கிணம், தயா, திக்கு, தியானிப்பார், துந்துபி, தேவாதிதேவன், நித்தியம், நேசம், பவம், பாசம், பாசுபதம், பாதம், பாதாரவிந்தம், பாவம், பாவனை,

40