பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630

பன்னிரு திருமுறை வரலாறு


என நக்கீர தேவர் பாடிய பெருந்தேவபாணியை அகச் சான்ருகக் காட்டுதலுங்கூடும். இதுவே நக்கீர தேவரது கருத்தென்பாருளராயின், இதனையடுத்து

ஈண்டிய சிறப்பி னினையடிக்கீழ்நின்று வேண்டு மது வினிவேண்டுவன் விரைந்தே

என இறைவனை வேண்டிப் போற்றும் பகுதிக்கு நக்கீரர் அருந்தமிழ் பழித்தலையே மீளவும் வேண்டினரென உரை கூறவேண்டிவரும். திருவால வாயில் எழுந்தருளிய இறைவனகிய நீ சொல்லின் எல்லையைக் க ட ந் து விளங்குந் தொன்மையுடையாய் என்பதனையுணரப் பெருது அடியேன் நின்பெருமைகளே அருமையுடைய தமிழ்ப் பாடல்களால் போற்றித் துதித்தேன். எல்லாப் பொருளும் ஒரு சேரத் தங்குதற்கு ஆதாரமாகவுள்ள நின் திருவடிக் கீழ்நின்று நின்னருளால் வேண்டக்கத் தக்கதனை இனி விரைந்து வேண்டிப்பெறும் அவாவுடையேன் என நக்கீரதேவர் திருவாலவாயிறைவனைப் பணிந்து வேண்டு வதாக அமைந்ததே,

சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே அதஞல் கூடலால் வாய்க் குழகளுவ தறியாதருந் தமிழ் பழிச்சின னடியேன் ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டுமது வினி வேண்டுவன் விரைந்தே.

எனவரும் பெருந்தேவ பாணியாகும். இதன்கண் அருந் தமிழ் பழிச்சினன் என்ற தொடரையே பிற்காலத்தார் அருந்தமிழ் பழித்தனன் எனத் தவருகப் பாடங்கொண்டு மேற்குறித்த புனைந்துரைக் கதைக்கு இடஞ்செய்து தந்தனரெனக் கருதவேண்டியுளது.

நக்கீரதேவர் பாடிய பிரபந்தங்களை நுணுகி நோக்குங் கால் அவர் சங்க காலத்தில் வாழ்ந்தவரல்லரென்பதும், தேவார ஆசிரியர் மூவர்க்குங் காலத் தாற் பிற்பட்டவ ரென்பதும் இறைவன் தருமிக்குப் பொற்கிழி யளித்த திருவிளையாடலுக்கும் கைலையாதி காளத்திபாதி யந்தாதி முதலிய பி ர ந் தங்களை ப் பாடிய நக்கீர தேவரது வரலாற்றுக்கும் எத்தகைய தொடர்புமில்லை. யென்பதும் நன்குபுலம்ை. இனி நக்கீரதேவர் பாடிய பிரபந்தங்களை முறையே நோக்குவோமாக,