பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650

பன்னிரு திருமுறை வரலாறு


அன்புமிகுந்த இல்வாழ்க்கையின் பயிற்சியால் அவ்விலங்கு களிடத்தும் அருள் மீதுர்ந்த ஈரநெஞ்சத்தினராயிருந்தனர் என்னும் உண்மையினை இந்நூலில் நக்கீர தேவர் இனிது விளக்குகின்ருர் ஈங்கோய் மலையில் வேட்டைமேற் சென்ற குறவனுெருவன், சேய்மையிலே மேய்ந்து திரியும் மானுென்றைக் கண்டு வில்லை வளைத்து அம்பினைத் தொடுத்து அம் மானின் மேல் எய்தற்கு நெருங்கிச் செல் பவன், அது கன்னியிளமானுதலையும் அதனது மருண்ட பார்வை தன்னுற் காதலிக்கப்படும் குறத்தியின் அழகிய நோக்கினை ஒத்திருத் தலையும் கண்டு, உவகை நிரம்பிய உள்ளத்தணுகி, தான் முன்னர் எய்தற் பொருட்டுக் கைபி லெடுத்த அம்பினைத் துணியிற் செருகிவிட்டு, அவ்வழகிய மானை நோக்கி, இளமை பொருந்திய மானே, நின்னைத் துன்புறுத்த மாட்டேன். நீ பயப்படாது மெல்லச் செல்வா யாக ' என வழியனுப்புங் குறிப்புடன் அருள் மீதுரர்ந்த உள்ளமுடையய்ை நின்ருன். அன்பினுல் உள் ளத்தை நெகிழ்விக்கும் அக்குறவனது அருட்பண்பினை,

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்

கையிற் கணைகளைந்து கன்னிமான்- ைபயப்போ

என்கின்ற பாவனை செய் ஈங்கோயே துரங்கெயில்கள்

சென்றன்று வென்ருன் சிலம்பு. எனவரும் பாடலில் ஆசிரியர் விரித்துரைத்த நயம் படித்து இன்புறுதற்குரியதாகும்.

முதுமை மீதுாரத் தளர்நிலையெய்திக் கூனியவுடம்பின ளுகிய வேடனுெருவன், யானைக் கூட்டத்தினிடையே அகப்பட்ட இளநங்கையொருத்தியை உய்வித்தல் கருதி அங்குள்ள யானைகளைத் தாளுெருவனேயாக நின்று விலக்கி அவளை மீட்டுக் கொணர்ந்தான் என்ற செய்தியை இந் நூல் 18-ஆம் பாடல் விளக்குகின்றது. கூ ைழ மு து வேடனது பேராண்மையே இங்ங்னமால்ை அடலேறு போலும் உடலுரன் பெற்று வாழ்ந்த இளைஞர்களின் தறுகண்மையினை எடுத்துரைத்தலெங்ங்னம்?

இளவேனிற் காலத்துப் பூத்து விளங்கும் மாம் பொழி லினிடையே தென்றற் காற்று வந்து நுழைகின்றது. அங்ங்ணம் நுழையும் தென்றல்தானும் பகலிற் பலருங் காண நுழையாமல் இரவுப்பொழுதில் நுழைகிறது. பிறர்