பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652

பன்னிரு திருமுறை வரலாறு


கத்தை அம்மலையிற்புகுந் தென்றலும் மேற்கொள்வ தாயிற்று என்னும் பொருளிற் சிலேடை நயமமைய நக்கீர தேவர் இப்பாடலை இயற்றிய நுட்பம் நினைக் குந்தோறும் வியப்பினை விளப்பதாகும்.

இறைவன் உயிர்களின் நன்மை குறித்து வழங்கிய உடம்பு, பொறிகள், உட்கருவிகள் ஆகியவற்றை நன் முறையிற் பழக்கி எல்லாம்வல்ல அம் முழுமுதற் பொருளை வழிபட்டு இன்புறுதலே மக்கட் பிறவியால் வரும் பயணுகும் என வற்புறுத்தக் கருதிய ஆசிரியர், மனவுணர்வில்லாதன என இழித்துரைக்கப்படும் அஃறிணையுயிர்களும் ஈங்கோய் மலையில் எழுந்தருளிய இறைவனை அன்பினுல் வழிபடும் நன் ஞானம் பெற்று விளங்குமியல்பினை எடுத்துரைக்கு முகத்தால் நம்மனுேரை இறைவனது திருவருட்பணியில் ஈடுபடுத்துகின்ருர் சிங்கமும் புலியும் யாளியும் ஆகிய கொடு விலங்குகள் தம் கொடுந் தொழிலை மறந்து இறைவன் பால் பேரன்புடையனவாய் நறுமலர்களைப் பறித்துக்கொண்டு ஈங்கோய் மலையின்மீதேறி இறைவனை அருச்சித்து வழிபடுந் திறத்தினையும் அவை அன்பினும் செய்யும் வழிபாட்டினைக்கண்டு இறைவன் மகிழ்ந்து அருள் செய்யும் இயல்பினையும்,

அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப் பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச்-சொரிய எரியாடி கண்டுகக்கும் ஈங்கேயே கூற்றந் திரியாமற் செற்ருன் சிலம்பு.

என்ற பாடலால் ஆசிரியர் அறிவுறுத்துகின்ருர் புனத்தில் திரியும் யானையானது இறைவனை வழிபட விரும்பி அங் குள்ள வேங்கை மரத்தின் பூங்கொத்துக்களைப் பறித் தெடுத்துக்கொண்டு மலையின்மீதுள்ள குளிர்ந்த சுனை நீரைத் திருமஞ்சனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நினைவுடன் ஈங்கோய்மலையில் விரைந்தேறும் காட்சியினை,

கொல்லை யிளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுகனே மல்லல் நீர் மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லை

இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய் வருங்கைக் களைவான் மலை.

என்ற பாடலால் அழகுறப் புலப்படுத்துகின்ருர். இங்ங்னமே அம்மலையில் வாழும் குரங்குகள் மலையுச்சியில்