பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 8ష్ణ్ణి

மண்டினி ஞாலத்து மன்னுயிர்க்கெல்லா மூழி நின் னடி யே த தி நின்ற பல் லு Nயும் பொ ன்னுல கெய்துவர் காண்பர் அதனுல், அறியேன் சொன்ன வறிவில் வாய்மொழி வறிதெனக் கொள்ள யுலகம் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண் ணிலவணிந்து கீதம் பாடிய வண்ண ல் நின் பாதம் பரவுதுஞ் சென் னியிற் பணிந்தே,

என யாப்பருங்கல விருத்தியுரையில் இத் திருவெழு கூற்றிருக்கை மேற்கோளாகக் காட்டப்பெற்றுளது. இப் பாடத்திற்கும் பதினுெராந் திருமுறை அச்சுப்புத்தகத்திற் காணப்படும் பாடத்திற்கும் பெரிதும் வேறுபாடுளது. எனினும், எழு கூற்றிருக்கைக்குரிய எண்கள் இயல் பிறழாது அமைந்துள்ளன. இவ் விருவேறு பாடங்களையும் ஒப்புநோக்கி உண்மைப்பாடத்தினைக் கண்டுணர்தல் அறிஞர்கடகுைம்.

மாதொருபாகனுக விளங்கும் சிவபெருமானது அருளுருவத்தோற்றத்தினையும் அவ்விறைவன் உயிர்களின் நலங்கருதிச் செய்தருளிய அருட்செயல்களை யும் நக்கீர தேவர் இத்திருவெழுகூற்றிருக்கையில் தெளிவாக விரித் துரைத்துள்ளமை படித்தின்புறத்தக்கதாகும்.

பெருந்தேவபாணி

நக்கீரதேவர் திருவாலவாயிறைவனை முன்னிலைப் படுத்துப் பரவிப் போற்றிய இசைப்பாட்டு பெருந்தேவ பாணியென்பதாகும். இஃது அறுபத்தேழடிகளாலியன்ற ஆசிரியப்பாவாக அமைந்துள்ளது.

தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பரவிய பாடல் தேவபாணியெனப்படும். பாணி-பண்ணுேடு கூடிய பாட்டு. இதனை ,

ஏனையொன்றே

தேவர்ப் பராஅய முன் னிலைக் கண்ணே.

என வருஞ் செய்யுளியற் சூத்திரத்துள் ஒத்தாழிசைக் கலியின் வகையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர்,

i. ஒருமிட றிருவடி வாக்கின. பா. வே,