பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 爵翁重

வொருபோகு தேவபாணியாய் வந்தன கண்டுகொள்க’ எனவும், தலையளவு வண்ணகப் பெருந்தேவபாணி எனவும் வரும் பேராசிரியர் உரைத்தொடர்களாலும் நன்கு துணியப்படும். சிறுதேவபாணி, பெருந்தேவபாணியென்ற பெயர்களிற் குறிக்கப்படும் சிறுமை பெருமையென்பன செய்யுளின் அடிச்சிறுமையையும் பெருமையையும் முறையே குறித்து நின்றன வென க் கொள்ளுதல் பொருந்தும்.

தொல்காப்பியனர் கூறுமாறு கலிப்பா வ ை யிலமைதற் குரிய தேவபாணியாகிய இசைப்பாட்டு பிற்காலத்தில் யாப்புவேறுபட்டு ஆசிரியம் முதலிய பிறபாக்களிலும் இயற்றப் பெறுவதாயிற்றென்பது நக்கீரதேவர் இத்தேவ பாணியை ஆசிரியப் பாவினுற் பாடியிருத்தலாற்புலனும். நக்கீரதேவர் பாடிய இவ்வாசிரியப்பாட்டு, அறுபத்தேழடி களால் நீண்ட பெருமையுடையதாய், முழுமுதற்கடவுளா கிய சிவபெருமானை முன்னிலைப்படுத்து அவ்விறைவனது திருவருட்டிறத்தைப் பண் பொருந்தப்பரவிப் போற்றுவதா தலின் பெருந்தேவபாணி யெனப் பெயர் பெறுவதாயிற்று. தொல்காப்பியச் செய்யுளியலுரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ள பெருந்தேவபாணியாகிய பாடல் களுக்குப் பண்ணுந் தாளமும் வகுக்கப்பெற்றுள்ளன. அவற்றை நோக்குங்கால் நக்கீரதேவர் பாடிய இப்பெருந் தேவபாணிக்கும் பண்ணுந்தாளமும் வகுக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனும். இப்பாடலுக்கு முன்னேர் வகுத்த பண்ணுந் தாளமும் பயில் வாரில்லாமையால் ஏடுகளிற் குறிக்கப்படாது மறைந்தனபோலும்,

இறைவனுடைய திருப்பெயர்களையும் மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டி அவ்விறைவன் செய்தருளிய அருட் செயல்களையும் உலகெலாமாகி வேருய் உடனுமாய் யாண்டும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனது மெம்ம்மைத் தன்மையையும் நக்கீரதேவர் இப்பெருந்தேவபாணியில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார். நக்கீர தேவர் திருவாலவாயிறைவனை நோக்கி, சொலற்கருந்தன்மைத் தொல் லோனுகிய நீ, உயர்மதிற் கூடலின் ஒள்ளிய தீந்தமிழை ஆராய்ந்த பெரியோன் என்பதனையுணராது நின்னை அருமை நிறைந்த தமிழ்ப்பாடலாற் போற்றிப் பரவினேன் அடியேன். எல்லா நூற்பொருளுந் தன் பொருளேயாகத் திரண்டு கூடிய சிறப்பினையுடைய நின்