பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 667

தாயேயாகி வளர்த்தனே போற்றி

மாற்றமனங்கழிய நின்ற மறையோனே '

எனத் திருவாதவூரடிகளும் அருளிய பொருளுரைகளை,

கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக் கலந்து கசிந்துதன் கழலினையவையே நினைத திட வாங்கே தோன்று நிமலனே '

  • தாயாய் மன்னுயிர் தாங்குந் தலைவனை

வாக்கு மனமும் இறந்த மைந்தனை '

என வருங் கோபப் பிரசாதத் தொடர்கள் நினைவுபடுத்தல் காணலாம்,

காரெட்டு

தலைவனது பிரிவினுல் வருத்தமுற்ற தலைமகளை நோக்கிக் கார்ப்பருவம் வந்தது, இனித் தலைவரும் வந்து விடுவார் என்று கூறித் தோழி வற்புறுத்துவதாக அமைந்தது, நக்கீச தேவர் பாடிய காரெட்டு என்னும் இப் பிசபந்தமாகும். இந்நூல் கார்ப்பருவ வாவினைக்கூறும் எட்டுப் பாடல்களால் இயன்றமையாற் காரெட்டு என்னும் பெயருடையதாயிற்று. கார்ப்பருவ வர வினைக் கூறும் நாற்பது பாடல்களாலியன்ற கீழ்க்கணக்கு நூல் கார் நாற்பது எனப் பெயர் பெற்றமைபோலக் கார்கால வரவினைக் கூறும் எட்டுப் பாடல்களாலியன்ற இப்பிரபந்த மும் காரெட்டு எனப் பெயர் பெற்றதெனத் தெரிகிறது. உலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருளின்பங்களும் நடத் தற்கேதுவாகிய மழையினது வரவினை எடுத்து உரைக்குமுகத்தால் அம்மழைக்குக் காரணமாகிய இறைவ னது திருவருள் வண்ணத்தை நினைப்பிப்பது இப்பிரபந்தம் ஆகும்.

மேகமானது சிவபெருமானது திருநீலகண்டத்தைப் போன்று கருநிறமுடையதாய், இறைவன் கையிலேந்திய வில்லினைப்போன்ற வான வில்லைத் தாங்கி, ஐந் தலை பரவினை அணிகலனுகப் பூண்ட அப்பெருமானது ஒளி கிளர் சடைக்கற்றையினையொத்து மின்னி, அவன் திருவடியில் அணியப்பெற்றுள்ள வீரக்கழலினையொத்து முழங்கிய தோற்றத்தினை,