பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674

பன்னிரு திருமுறை வரலாறு


" கள நன்கிழைத்துக் கண்ணிசூட்டி

வள நகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு து உய் முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்" எனவரும் வெறிபாடிய காமக்கண்ணியார் பாடலாலும் நன்கு புலனுதல் காணலாம்.

  • முருகாற்றுப்படுத்த எனவரும் இத்தொடர்க்குப் பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின என்று பொருள் கூறுவர் நச்சிஞர்க்கினியர்.

இனி, முருகன் எழுந்தருளிய ஆறுபடை வீடுகளைப் பற்றிக் கூறுவது இத் திருமுருகாற்றுப்படையெனக் கொண்டு இவ்வொரு பாடலை ஆறுபகுதிகளாகப் பகுத்து வழங்குவாருமுளர், முருகன் வீற்றிருந்தருள்புரியுந்திருப் பதிகளாக இத்திருமுருகாற்றுப்படையிற் சிறப்பிக்கப் பட்டவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவி நன்குடி, திருவேரகம் என்னும் நான்கு திருப்பதிகளே யாகும். அன்னேர் ஐந்தாவதாகக் கூறும் குன்று தோருடல் ' என்பது ஒரு தனித்திருப்பதியன்று. முருகப் பெருமான் குறிஞ்சிநிலத் தெய்வமாதலால் அப் பெருமானுக்கு எல்லாமலேகளும் விரும்பி விளையாடுதற் குரிய சிறப்புடைய திருத்தலங்களே யென்னுங்கருத்தினுல் "குன்று தோருடலும் நின்றதன்பண்பே" என்ருர் ஆசிரியர். மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் முருகப் பெருமானுக்கு நிலைபெற்ற பண்பாம் என்பது இத் தொடரின் பொருளாகும். இவ்வாறே குறிஞ்சிக்கிழவன் என்ற பொருள்படப் பழமுதிர் சோலை மலை கிழவோன்' என முருகவேளை இந்நூலாசிரியர் இத் திருமுருகாற்றுப் படையின் இறுதியடியிற் குறிப்பிட்டு உள் ள ர், இங்குக் கூறப்பட்ட பழமுதிர் சோலைமலை யென்பதனை இப்பொழுது அழகர்மலையென வழங்குந் திருப்பதியாகக் கொள்வதுமுண்டு. இம்மலை சங்கத்தொகை நூலாகிய பரிபாடலில் திருமாலிருஞ்சோலையென்ற பெயரால் திரு மாலுக்குரிய சிறப்புடைய திருப்பதியாகப் போற்றப்பெற் றுளது. பழமுதிர் சோலைமலையென அதனைத் தனியே எண்ணுமல் அம்மலையை முருகனுக்கு உரிமையாக்கிப் பழ முதிர்சோலை மலைகிழவோன்' என அவ்விறைவனை நக்கீரர் குறித்துப் போற்றுதலால் பழமுதிர்சோலைமலை யென்ற