பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676

பன்னிரு திருமுறை வரலாறு


வையத்து வாழ்வாங்குவாழும் உயர்ந்த ஒழுகலா றுடைய பெரும்புலவரது வாழ்க்கையில் நெறிமுறைபிறழா உலகியற் செயல்களும் வீடுபேற்றிற்குக் காரணமாகிய மெய்ந்நெறிச் செயல்களும் படிகால் முறையே ஒருங்கு நிகழுதல் இயல்பாதலால் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த தெய்வப்புலவராகிய நக்கீரனர் உலகியல் வாழ்விலி நின்ற நிலையிலேயே எங்கும் நிறைந்த பெரும் பொருளாகிய இறைவனை யுணர்ந்து பேரின் பமெய்தும் வழிபாட்டு முறை களைத் திருமுருகாற்றுப்படையில் விளக்கியுள்ளார். வள்ளல் களே நாடிச் செல்லும் பரிசிலர்வாழ்க்கையைப் பற்றியும் போகநுகர்ச்சியாகிய இல்வாழ்க்கையைப் பற்றியும் அவர் சிறிதும் இழித்துரைத்திலர். பத்துப்பாட்டில் தொகுக்கப் பெற்றுள்ள இவ்விரு பாடல்களும் 'மதுரைக் கணக்காய ஞர் மகளுர் நக்கீரனுர் " என வழங்கும் ஒருவராலேயே பாடப்பெற்றனவாகப் பண்டையோர் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார்கள். கடைச்சங்க காலத்தவராகிய நல்லந்து வளுர் என்ற புலவர் பாடிய பாடல்களுள் பரிபாடலில் தொகுக்கப்பட்ட பாடல்களையும் கலித்தொகையிலுள்ள பாடல்களையும் ஏனைத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்ட பாடல்களையும் ஒப்புநோக்குங்கால் அப்பாடல்கள் பொரு ளமைதியிலும் மொழிநடையிலும் சிறிது சிறிது வேறுபடக் காண்கின்ருேம். சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் காரணமாக யாப்பியலும் மொழிநடையும் வேறுபடுதல் இயல்பேயாம். இங்ங்னமே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு பாடிய நெடுநல்வாடை யும், முருகன்பால் முதுவாயிரவலனை ஆற்றுப் படுத்தும் நிலையிற்பாடிய திருமுருகாற்றுப்படையும் எடுத்துக் கொண்ட பொருள் வகையால் வேறுபட்டனவாதலின், அவற்றிடையே சிறிது வேறுபாடு காணப்படுதல் ஏற்புடை யதேயாம். கடைச் சங்கச் செய்யுட்களில் இடைச் சங்கத் தொடக்கத்தில் எழுந்த தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்திற் சுட்டப்படாத மொழி வழக்குகள் சில புதியன புகுதலாக ஆங்காங்கே இடம்பெற்றிருத் தலைக் காண்கின்ருேம். புதியன புகுதலாகிய இவ் வழக்கிற்குத் திருமுருகாற்றுப் படையும் விலக்கான தன்று. இத்தகைய சிறிய வேறுபாட்டினை ஆதரவாகக் கொண்டு, இவ்விரு பாடல்களையும்.