பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பன்னிரு திருமுறை வாலாறு

பேணு பெருந்துறையிற் கண்ணுர் கழல்காட்டி நாயேனே யாட்கொண்ட அண்ணுமலையானைப் பாடுதுங்காண் அம்மாளுய் எனவும்,

சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி யெண்ணரிய இன்னருளால் அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மாளுய் எனவும்,

  • அருவாய் மறைபயில் அந்தனணுயாண்டு கொண்ட

திருவான தேவற்கே சென்று தாய் கோத்தும்பி எனவும்,

உருநாம் அறியவோர் அந்தன ளு யாண்டு கொண்டான் எனவும்,

அந்தண னுகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னே யு மாட்கொண் டருளும் செந்தழல் போற்றிருமேனித் தேவர் பிரான் வரக்கூ வாய் எனவும்,

பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத் தெஃனயாண்ட ஆருடையம்பொனின் மேனி யமுதினை நீ வரக்கூவாய்

எனவும்,

செந் தழல் புரை திரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தன ளுவதுங் காட்டிவந் தாண்டாய்

ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே எனவும்,

  • பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்

சீரார் திருவடி யென்றலைமேல் வைத்தபிரான் எனவும்,

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி

மதித் திடா வகை நல்கினுன்

வேய தோளுமை பங்க னெங்கள்

திருப்பெருந்துறை மேவினுன்

காயத்துள்ளமு துறவூற நீ

கண்டு கொள்ளென்று காட்டிய

சேயமாமலர்ச் சேவடிக்கனஞ்

சென்னிமன்னித் திகழுமே.

எனவும்,