பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருமுருகாற்றுப்படையடிகளில் தெளிவாக விளக்கப் பெற்றிருத்தல் காணலாம். எல்லேயில் காலமாகப் பல்வகைப் பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து அல்லற்படும் மன்னுயிரெல்லாம் தன் திருவடிக் கீழடங்க இறைவனுகிய தான் அவற்றைத் தன்னுளொடுக்கி மேற்பட விரிந்து விளங்குவோணுதலின், அவனுடைய பண்பெல்லாம் மன்னுயிர்களால் அளந்தறியப்படுவன அல்லவென்பார் நின்னளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் என்றும், இறைவனது அருமையுணர்ந்து உயிர்களாற் செய்யத்தகுவது இறைவனுடைய திருவடியினை வணங்குவ தன்றி வேறில்லை யென் பார், நின்னடியுள்ளிவந்தனன் என்றும், ஒரு வாற்ருனுந் தனக்கு நிகராவார் பிறரின்றி ஞானத்தால் மேற்படத் திகழும் தனிமுதல்வன் இறைவன் என்பார். நின்னுெடு புரையுநரில்லாப் புலமையோய்” என்றும் இறைவனதியல்பை விளக்கினர் நக்கீரனுர்,

இங்ங்ணம் சைவத்திருமுறையாசிரியர் மேற்கொண் டொழுகிய சமயதத்துவங்கள் பல பண்டைச் சங்கப்பனுவ லாகிய இத்திருமுருகாற்றுப்படையில் இடம் பெற்றிருத்த லாலும் சேயோனுகிய முருகனும் செம்மேனிப்பேராளனுகிய சிவபெருமானும் முறையே க்லேயிளங்கதிரவனும் மாலை ஞாயிறும் போன்ற தோற்றத்தையுடையவரென்பதும் பொருளால் ஒருவரேயென்பதும் தமிழகத்தில் நெடு நாட்களாக நிலவிவரும் பழங்கொள்கையாதலாலும் சிவ பெருமானைப்பற்றிய அருள்நூல்களின் தொகுதியாகிய பதினுெராந் திருமுறையினுள்ளே முருகவேளைப் பரவிய இத் திரு முருகாற்றுப்படையும் இடம்பெறுவதாயிற்று.

இயற்கை வனப்பும் தெய்வ வனப்பும் அமைய நக்கீரனர் பாடிய திருமுருகாற்றுப்படையென்ற செழும் பாடல் நவில்தொறும் இன்பந்தரும் சுவை நயமுடைய தாகும். இப்பாட்டின் சுவை நலங்களை நச்சினர்க்கினியர் எழுதிய உரைகொண்டு பயின்று தெளிதல் அறிஞர்க்குப் பெருவிருந்தாகும்.

இத்திரு முருகாற்றுப்படையின் பின் "குன்றமெறிந் தாய் என்பது முதலாக 'முருகனே செந்தில் முதல்வனே' என்பதீருக ஏழுவெண்பாக்கள் உள்ளன. முருகப் பெருமான முன்னின்றுபோற்றுந் தோத்திரங்களாக