பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692

பன்னிரு திருமுறை வரலாறு


அகப்படுத்திக்கொண்ட உடும்பொடு வில்லும் அம்பும் உடையய்ைச் செருப்பணிந்து தன் சீனத் தொடர்ந்து வரும் நயயொடும் காளத்தியிறைவனை வழிபடச் சென்றபொழுது, இறைவன் சிவலிங்கத்திருமேனியிலுள்ள மூன்று கண்களில் (வலப்பக்கத்ததாகிய) ஒருகண்ணிலே குருதிநீரொழுக இருந்தனன். அதனைக்கண்ட வேடன், உடல் நடுக்கம் உற்றுப் பதைபதைத்து மனஞ்சுழன்று தன் வாயிற் கொணர்ந்த திருமஞ்சன நீர் சிந்தத் திருவமு தாகிய ஊனுடன் வில்லும் அம்பும் கைகளிலிருந்து நழுவிச்சிதற நிலத்தின் மீது செயலற்று விழுந்தான். சிறிது நேரத் திற்குப்பின் தெளிவுற்றெழுந்தான். எம்பெருமாளுகிய இறைவனுக்கு இத்தீங்கிழைத்தவர் இம்மலையைச்சார்ந்த காட்டகத்து இருத்தல் கூடுமோ என ஐயுற்று எல்லாப் பக்கமும் அலைந்து தேடி ன்ை. ஒருவரையுங் காண வில்லை. பின்பு ஒருவாறு தேறி இறைவன் கண்ணில் இடைவிடாது ஒழுகும் குருதியை நிறுத்தத்தக்க பலவகை நன் மருத்துகளைத் தேடிக்கொணர்ந்து பிழிந்து பார்த்தான். அம் மருந்துகளாற் சிறிதும் பயனின்மைகண்டு மனம் தளர்ந்து என் அத்தணுகிய இறைவனுக்கு அடுத்த நோய் எதுவோ' என உளங்கனன்று கதறினுன். இத்துன்பத் தினைக்காணுமளவுக்கும் பொறேன். இதனைக் காணுதற்கு உரிய தீவினையுடைய எனது கண்ணைத் தோண்டியெடுத் துக் கடவுளது கண்ணிலுள்ள புண்ணில் அப்பியும் பார்ப் பேன்’ எனத் துணிந்து அம்பினுல் தன் கண்களில் ஒன்றைத் தோண்டியெடுத்து இறைவனது குருதிபடிந்த கண்ணில் அப்பினன். அவ்வளவில் குருதிநீர் வழிதல் நின்றமையால் நன்ருயிற்று. இறைவனது மற்ருெரு கண்ணிலும் இங்க னம் குருதி நீரொழுகக்கண்ட வேட்டுவன் தக்க நன்மருந்து கண்டமைக்குத் தான் பெரிதும் உளமகிழ்ந்து மற்றைக் கண்ணையும் தோண்டி இறைவனது கண்ணில் அப்பக்கருதி அம்பில்ை தோண்டப்புக்கான். அந்நிலையில் காளத்தியப்ப கிைய சிவபெருமான், நில்லுகண்ணப்ப, நில்லுகண்ணப்ப என் அன்புடைத் தோன்றல் நில்லுகண்ணப்ப ' என்ற இன்மொழியோடு சிவலிங்கத்தினிடமாகத் தோன்றிய தனது மலர்போலும் திருக்கரத்தால் வேடர் தலைவனது கையனை அம்புடன்சோப் பிடித்துத் தடுத்தருளின்ை. வானவர் மலர்மழை பொழிந்தனர் சங்கு, படகம், துந்துபி முதலிய மங்கள வாத்தியங்கள் இயம்பின. சிறப்புடைய