பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பன்னிரு திருமுறை வரலாறு


யொப்பு வந்தெய்திய நிலையே இறைவனுகிய குருவினைக் காணப்பெற்று மகிழ்தற்குரிய செவ்வி என்பதனைத் திருவாத ஆரடிகள் தமது வாழ்க்கை நிகழ்ச்சியில் வைத்து,

" உனக்கிலாததொர் வித்துமேல்வினை

யாம லென் வினே யொத்தபின் கணக்கிலாத் திருக்கோல நீ வந்து

காட்டினுய்கழுக் குன்றிலே "

என விளக்கிய திறம் இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

ஆணவமலம் ஒன்றேயுடைய உயிர்களுக்கு உயிர்க்குயி

ராய் உள்நின்றும், ஆணவம் கன்மம் என்னும் இருமல. முடைய உயிர்களுக்கு உமையொருபாகராய் முன்னின்றும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களுமுடைய

  • 。 - - - உயிர்களுக்கு மானுடத் திருமேனி கொண்டு படர்க்கையில் நின்றும் இறைவன் சிவஞானம் நல்குவன் எனச் சைவ நூல் கள் கூறும். அம்மரபின்படி சிவபெருமான் மானுடத் திரு மேனி கொண்டு குருவாய் வந்து திருவாதவூரர்க்குத் திருவடி ஞானம் வழங்கி ஆட்கொண்டருளினன் என்பது வரலாறு. இச்செய்தி,

ஈறிலா தநீ எளியையாகிவந்து

ஒளிசெய் மானுடமாக நோக்கியும் கிறி லாத நெஞ்சுடைய குயினேன் . என இறைவனை நோக்கி அடிகள் உளமுருகிப் போற்றுத லால் இனிது புலனுதல் காணலாம். தேவருங் காணுச் சிவ பெருமான் இந்நிலமிசைத் தம் கண்காண எழுந்தருளி வந்து தம்மை ஆட்கொண்டருளிய அருட்செயலை,

தேவருமறியாச் சிவனே காண்க பெண்ணு ண லி யெனும் பெற்றியன் காண்க கண் ணு லியானுங் கண்டேன் காண்க

புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுந் தேறினன் காண்க அவனெனை யாட்கொண்ட ருளினன் காண்க : எனவும்,

அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரணுகி யருளிய பெருமையை எனவும் வரும் திருவாசகத் தொடர்களில் வாதவூரடிகள் தெளிவாகக் குறித்துப் போற்றியுள்ளார்.