பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசன தேவ நாயஞர் tు

பெறும் முழுமுதற் கடவுளதியல்பினைத் தெளிவாக விளக்குவனவாகும்.

தன்னை அன்பினுல் வழிபாடு புரிந்த சண்டேசப் பிள்ளையார்க்கு இறைவன் அருள் செய்த திறத்தினை யெண்ணியுளமுருகிய பரண தேவநாயனுர்,

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித் தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக்-கடைந்துன்பால் அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று அவ்வமுத மாக்கினுய் காண். என இறைவனை நோக்கி உளமுவந்து போற்றியுள்ளார். இவ்வாறே கண்ணப்ப நாயனர் காளத்தியிறைவனை வழிபட்ட முறையினையும் அன்புருவமாகிய அவர்க்கு இறைவன் அருள் செய்த சிறப்பினையும்,

சென்றுசெருப் புக்காலாற்செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச்-சென்று தன் கண்ணிடந்தன் றப்புங் கருத்தற்குக் காட்டினுன் கண்ணிடந்தன் றப்பாமைப் பார்த்து. எனவரும் பாடலால் இவ்வாசிரியர் போற்றிப்பரவிய திறம் படித்து மகிழ்தற்குரியதாகும்.

அட்ட வீரட்டம், அண்ணுமலை, அம்பர் மாகாளம், ஆமாத்துார், ஆரூர்முலட்டானம், ஆலங்காடு, ஆலந்துறை, ஆலவாய், ஆனைக்கா, இடைமருது, ஈங்கோய்மலை, எழிலவாய் (?) ஏகம்பம், ஒற்றியூர், கடவூர், கடளுகைக் காரோணம், கயிலை, கழிப்பாலை, கழுமலம், காவாத்தலை, காளத்தி, காறை (காருயில்), கானப்பேர், கோளிலி, சாய்க்காடு, சிராமலை, செங்காட்டங்குடி, சேதுக்கரை, சோற்றுத்துறை, திருமீச்சூர், தில்லைப்பொன்னம்பலம், பாசூர், புகலூர், பூவணம், பைஞ்ஞ்லி, மருகல், மறைக்காடு, வஞ்சி, வலஞ்சுழி, வெண்காடு ஆகிய திருத்தலங்களை ஆசிரியர் இத்திருவந்தாதியிற் குறித்துப் போற்றியுள்ளார். இவற்றுட் சில தலங்களின் பெயர்களைச் சிலேடைப் பொருளனவாகக்கொண்டு மோனை எதுகை முரண் முதலிய தொடை நயங்களும் வேறுபிற அணிநலங்களும் அமையப் போற்றியுள்ளமை படித்துமகிழத்தக்கதாகும்.

திருக்கழிப்பாலையிறைவரைக் காமுற்ற தலைமகள் அவ்விறைவரது பிரிவாற்ருது வருந்திக் கூறுவதாக அமைந்தது,

45