பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராவிடிகள் 715

எனவும் வரும் பாடல்களால் அதிராவடிகள் சுவை பெற விரித்துரைத்துள்ளார். செங்கீரையாடுதலும் சப்பாணி கொட்டுதலுமாகிய பிள்ளைத் தமிழுறுப்புக்களை இத் திரு மும் மணிக்கோவையில் ஆசிரியர் குறிப்பிட்டுப் போற்றுதலால் இவர் வாழ்ந்த காலமாகிய கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியிலேயே செந்தமிழ் மொழியின் சிறப்புடைப் பனுவலாகிய பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் இயற்றப்பெற்று வழங்கியிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும்.

வேத முதல்வனுகிய பிரமனைக்கொன்ற பழியுடை யோனுக்குப் புதல்வகைப் பிறந்ததும் அன்றித் தானே நூலியற்றும் ஆற்றலின் றிப் பரதவர் மகள் புதல்வனுகிய இழிந்தோனுெருவன் சொல்லிய கதையினை மேருமலையிற் கைவருந்த எழுதிய யானைமுகக் கடவுளை யாம் பெரிதும் போற்றுவது எது கருதி ? எனப் பழித்துரைப்பது போன்றமைந்தது,

மின்னெடுங் கொண்ட லத்நெடு முழக்கத் தோவற விள்ங்கிய துளைக்கைக் கடவுளை யாமிக வழுத்துவ தெவனே அவனேற் பிறந்ததில் வலகின் பெருமூ தாதை உரந்தரு சிரமரிந் தவற்கே, வரைந்தது மேருச் சிமையத்து மீமிசை வாரிச் செல்வன் மகள் மகன் மொழியே. என்ற பாடலாகும். படைத்தற் கடவுளாகிய நான்முகனைச் சினந்த பேராற்றல் மிக்க முழுமுதற் கடவுளின் திருமகளு ராகத் தோன்றியவர் மூத்த பிள்ளே யாரென்றும், வேதப் பொருளாய் விளங்கும் விநாயகப் பெருமான் தன்னை வழிபடும் மெய்யடியாராகிய வியாச முனிவர்க்கு எளிவந்து தோன்றி அவர் சொல்லிய மாபாரதக் கதையினை மேரு மலையில் எழுதியருளினரென்றும் அக்கடவுளது அருமையி லெளிய அழகினை இத்திருப்பாடலில் அதிராவடிகள்

போற்றிப் புகழ்ந்துள்ளமை காணலாம். இதன்கண் பழிப்பதுபோலப் புகழ்தல் என்னும் அணிநலம் அமைந் திருத்தல் காண்க. ஈண்டு வ ரிச்செல்வன் மகள் !

என்றது கடலில் மீன்பிடிக்குந் தொழிலுடைய பரதவனுக்கு மகளாகிய மச்சகந்தியை. பராசர முனிவர் அவளைக் கூடிய நிலையிற் பிறந்த புதல்வர் வியாச முனிவராதலின் அவரை வாரிச் செல்வன் மகள் மகன் என்ருர்

ஆசிரியர்.