பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பன்னிரு திருமுறை வரலாறு


குறிப்பிட்டுள்ளார். அவர் கருத்தே அடிகள் வரலாற்றுக்கு ஏற்புடையதெனத் தோன்றுகிறது.

நமச் சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க எனவும்,

நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன் :

என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினுய் எனவும்,

ஓங்காரத்துட் பொருளே ஐயனெனக் கருளிய வா ருர் பெறுவா ரச்சோவே எனவும்,

அஞ்செழுத்தின் புனைபிடித்துக் கிடக்கின்றேனே எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் அடிகள் பெற்ற திருவைந்தெழுத் துபதேசத்தின் சிறப்பினை வற்புறுத்தல் காணலாம்.

امي مسبو ఛ్

திருவாதவூரர்க்குச் சிவபெருமான் ஞானுேபதேசம் செய்த முறையைப் பிற்காலத்தில் விரிந்து பரவிய சைவ சமயத் தீக்கை முறைகளில் நிருவான தீக்கை முறைக்கு ஒத்தவாறு கடவுள் மாமுனிவர் விரித்துக் கூறியுள்ளார். இம்முறை பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலிற் கூறப்படவில்லை. அருட்குரவளுகிய இறைவன், திருநோக்கி ஞலும், நினைவாலும் தொடுதலாலும் வாதவூரரது சித்தமலம் அறுவித்துப் பேரறிவு நல்கினன் என்ற அளவே பெரும் பற்றப் புலியூர் நம்பி கூறுவர் குருமூர்த்தியாகிய பெருமான், திருவாதவூரர் சென்னியில் திருவடி சூட்டித் தீக்கை செய்து, பல்லோருங்கான அவரது பாசத் தொடர்பாகிய மும்மலங் களையும் நீக்கியருளி, இறைவன் திருவடிகளை அகத்தும் புறத்தும் காணுமாறு காட்டிச் சொல்லிறந்த பேரின் பமாகிய சிவானந்தப் பெருந்தேனே நுகர்ந்து இன்புறும் முறையை அறிவுறுத்தி, நின்னை ஒரு பொழுதும் பிரியேன் என அன்புரை பகர்ந்து அழிவிலாப் பேரின்ப வாழ்வில் அடிகளை நிலைபெறச் செய்தனன். இம்மெய்ம்மை வரலாற்றின,

பெரியோ ளுெருவன் கண்டுகொ ளென்றுன்

பெய்கழ லடிகாட்டிப் பிரியேன் என்றென் றருளிய வருளும்

பொய்யோ எங்கள் பெருமானே :