பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 731

செல்லுங்கால் கடல் நடுவே நேரும் இடையூறுகளையும் நன்குனர்ந்தவரென்பதும்,

அருளா வயவர் அம்பிடை நடந்தும்

இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்

துன்று திரைப் பரப்பிற் குன்று பார்த் தியங்கியும் எனவரும் அடிகளது வாய்மொழியால் உய்த்துணரப்படும். அன்றியும் அடிகள் தாம் பாடிய கோயில் நான் மணிமாலை 16-ஆம் பாடலில் உடம்பினை மரக்கலமாக உருவஞ் செய்து பிறவிப்பெருங் கடலில் அது கவிழும் நிலையினைச் சுவை பெற்க் கூறியுள்ளார். முற்றுருவக அணியமைந்த அப் பாடற் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் அதனை ப் பாடிய திருவெண்காட்டடிகளுக்குக் கப்பல் யாத்திரையில் நிரம்பிய பயிற்சியுண்டென்பது இனிது விளங்கும்.

சேணுயர் மருத மாணிக்கத் திங்கனியை விளைவித்துக் கொள்ள முயன்ற மேலோராகிய தொண்டரது உழவு முறையையும், அவ்வுழவினில் ஈடுபடாது மனமெனும் புனத்தை வறும் பாழாக்கிய ஏனைக் கயவரது இழிவையும் திருவிடைமருதுர் மும்மணிக் கோவையின் பத்தாம் பாடலில் அடிகள் நயம்பெற விளக்கியுள்ளார். அடிகள் உழவு தொழிலையும் நன்ருக உணர்ந்தவரென்பதற்கு இப்பாடல் தக்க சான்ருதல் காணலாம்.

திருவெண்காடர் தம் குலம் விளங்கு தற்குரிய மக்கட் பேறின்றி வருத்தமுற்ருசென்றும் அவரது துயரைப்போக் கத் திருவுளங் கொண்ட இடைமருதீசனே சிவசரும ரென்னும் வேதியர்பால் குழந்தையாக வந்து தன்னைத் திருவெண்காடர்க்கு விற்கும்படி செய்து வெண் காடரால் வளர்க்கப் பெற்றுப் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி மறைந்தருளின னென்றும் வழங்கும் கதையினைப் பட்டினத்தடிகள் வரலாறு கூறுவோர் அனைவரும் விடாது கூறி வருகின் ருர்கள். இத்தகைய திருவிளையாடல்களை இறைவன் தன்னடியார்க்கு அருள் செய்தற்பொருட்டு எக்காலத்தும் செய்தருள் வா னென்பதிற் சிறிதும் ஐயமில்லை. இது கொண்டு அடியார் வரலாறுகள் எல்லாவற்றிலும் இறைவனுடைய அற்புத நிகழ்ச்சிகளைப் புகுத்திக் கூறுவதென்பது பிற்காலத் தலபுராண ஆசிரியர் களி 8, 2 ழக்கமாக நிலைபெற்றுவிட்டது.