பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண் காட்டடிகள் 737

செந்தமிழ்ப்பனுவல் கோயில் நான்மணிமாலை யென்ப தாகும். வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என் னும் நால்வகைப் பாக்களும் ஒன்றன்பினுென் ருக அந்தாதித் தொடையமையத் தொடுத்துவர வெவ்வேறு நிறமுடைய நால்வகை மணிகளால் தொடுக்கப்பெற்ற மாலை போன்று திகழ்வதாதலின் இது நான்மணிமாலையென்னும் பெயர்த் தாயிற்று. இது நாற்பது செய்யுட்களாற் பாடப்பெற்றுளது. நான்மணி மாலேயென்னும் செந்தமிழ்ப் பனுவலுக்குரிய மூல இலக்கியமாக நமக்குக் கிடைத்துள்ள பிரபந்தம் இக் கோயில் நான்மணிமாலையே எனக் கூறுதல் பொருந்தும்.

" சொல்லின் அளவும் பொருளின் அளவுமாகிய இரு வகை எல்லைகளையுங் கடந்து தங்களை மறந்து நின்னையே நினைப்பவர்களாகிய மெய்யடியார்களுடைய தூயவுள்ளத்தி லும் செம்பொன்னலாகிய தில்லையம்பலத்திலும் திருநடனம் செய்தருளும் சிவபெருமானே, நீ மலேயரையன் மகளும் திருமாலின் தங்கையுமாகி பார்வதியைத் திருமணம் புணர்ந்த நாளில் நினக்குரிய கொன்றைமலர்மாலை, இடபக் கொடி, தமருகப்பறை, கங்கையாறு, விரையாக்கலியென் னும் திருவானை, அயிராவணமாகிய வெள்ளே யானை, வேத மாகிய குதிரை, வான நாடு, மேருமலை, தில்லைப்பதி என்னும் பத்துறுப்புக்களையும் நினக்குரிய பதினுயிரம் பெயர் களுடன் புகழ்ந்து பாடித் திருமணப்பந்தரில் தேவர்களுக்கு முன்னே புகுந்து நின்னை அறுகும் மலரும் புனைந்து வாழ்த்திய மெய்யடியார்களாகிய நின் சுற்றத்தார்கள் நினக்குத் திருமணப் பரிசளித்துத் தாம் கலந்து கொண்ட செய்தியினை அங்கு எல்லோருங் காண வைக்கப்பட்டிருந்த வரிநெடும் புத்தகத்தில் எழுதி இருப்பார்களல்லவா? அவர்களுடைய பெயர்கள் வரையப் பெற்ற திருமணப் பட்டோலைப் புத்தகத்திலே அடியேனது பெயரையும் சேர்த் தெழுதும்படி வேண்டிக் கொள்கின்றேன். நினது திருவரு ளாணையிற்படின் கண்ணுக்குப் புலப்படாத சிறிய அணுவும் பேரண்டமாக வளர்ந்து தோற்றும். காட்டில் வாழும் சிறிய கொசுவும் கருடனக உயர்ந்து பறக்கும். ஆதலால் காலங்கடந்த நி ைது திருமண வாழ்த்தில் எளியேனையும் கலந்துகொள்ளச் செய்வதென்பது நின் திருவருளால் முடியாத செயலன்று என்பதனை அடியேன் நன்குனர் வேன்" எனத் தில்லையம்பலவாணனை நோக்கித் திருவெண்

47