பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752

பன்னிரு திருமுறை வரலாறு


விழுந்து யானெனப் பெயர் கூறப்பட்ட நச்சு மரமாக முளைத்து நீண்டு வளர்ந்து பொய்மையாகிய கிளைகளை எம்மருங்கும் விட்டுப் பாவமாகிய தழைகளைத் தழைத்துப் பூவென்று சொல்லும்படி கொடுமை யென்ற அரும்புகளே யீன்று தீமை மலர்ந்து துன்பமாகிய பல காய்களைக் கொத்தாகத் தாங்கிப் பின்பு அவை மரணமெனும் கனி யாகப் பழுத்து உதிர நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் பயனின்றிக் கணப்பொழுதில் இறந்தொழிகின்ருர்கள் " என உருங்க அணியமைய இப்பாடலில் அடிகள் விரித்துக் கூறியுள்ளார். இதன்கண் தொண்ட உழவரது அரிய முயற்சியாக அடிகள் வெளியிட்டருளிய செய்திகள், மெய்ம்மையாம் உழவைச்செய்து விருப்பெனும்

வித்தை வித்திப் பொய்ம்கையாங் களையை வாங்கிப் பொறையெனு

நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக்கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளைடிமன்றே. எனவரும் திருநாவுக்கரசர் திருப்பாடற்குச் சிறந்த விளக்க வுரைப் பகுதியாக அமைந்தமை ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும்.

உயிர் எவ்வியல்பினது என ஆராயப்புகுந்து தத்துவ சோதனை செய்து தம்மியல்பினையுணராது வருந்திய அடிகள், இறைவனது திருவருள் நாட்டம் பெற்றவுடனே உயிராகிய தம்மையும் இறைவனையும் உணரப்பெற்ற திறத்தை விரித்து உரைப்பது, மேவிய புன்மயிர்த் தொகையோ எனத் தொடங்கும் பதின் மூன்ரும் பாட லாகும். "நாடி, எலும்பு, நரம்பு முதலிய உடலுறுப்புக்களுள் உயிராகிய யான் யார் என்று என்னைத் தேடிப் பார்த்தும் என்னைத் தெளிய அறிந்து கொண்டேனல்லேன். இவ்வாறு தம்மைப்பற்றி ஆராய்ந்தறிகின்ற ஆராய்ச்சி யறிவின் கண்ணே இதனைத் தெளிவிப்பதாகிய அறிவு வேறு உண்டென்று ஆராய்ந்து நோக்கி அவ்வாறு நாடுங்கால் விளங்கித் தோன்றும் இறைவனது திருவடி ஞானத்தால் அம்முதல்வனையும் உணர்ந்து அவனது பேரறிவினுள்ளே தாம் அடங்கி நின்று அங்ங்னம் அறியும் பொருளாகிய தம்மையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அங்ங்னம் உணரும் பயிற்சி பெருதார் உயிராகிய தம்மை அறிய வல்லுநரல்லர் என்பதனை,