பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762

பன்னிரு திருமுறை வரலாறு


திருவொற்றியூர் ஒருபாவொருபது

திருவொற்றியூரிற் கோயில்கொண்டெழுந்தருளியுள்ள சிவபெருமானது பொருள் சேர் புகழை விரித்துரைக்கும் ஆசிரியப்பாவாகிய பத்துப் பாடல்களால் அந்தாதித் தொடைபெறவமைந்த பனுவலாதலின், இது திருவொற்றி யூர் ஒருபாவொருபது என்னும் பெயர்த்தாயிற்று. இதன் கண் உள்ள பாடல்கள் பத்தும் ஒற்றியூரிறைவனை முன் னிலைப்படுத்துப் போற்றுமியல்பின வாய், உணர்தற்கரிய சைவசித்தாந்த வுண்மைகளைத் தெளிவாக விளக்குவன

வாகவுள்ளன.

உலகமே யுருவமாகத் திகழும் இறைவனது பெருந்திரு வுருவின் இயல்பினை இப்பனுவலின் முதற் பாடலில் அடிகள் இனிது புலப்படுத்தியுள்ளார். சிவபெருமான் சமயங் கடந்த தனிமுதற் பொருளாக விளங்கும் மாட்சியினை,

இடத்துறை மாதரோ டீருடம்பென்றும் நடத்தினை நள்ளிருள் நவிற்றினை யென்றும் புலியதள் என்பொடு புனைந்தோ யென்றும் பலிதிரி வாழ்க்கை பயின் ருே யென்றும் அருவமும் உருவமும் ஆளுயென்றும் திருவமர் மாலொடு திசைமுக னென்றும் உளனே யென்றும் இலனே யென்றும் தளரா னென்றும் தளர்வோ னென்றும் ஆதியென்றும் அசோகின னென்றும் போதியிற் பொலிந்த புராண னென்றும் இன்னவை முதலாத் தாமறி யளவையின் மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப் பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி அணங்கிய அவ்வவர்க் கவ்வவையாகி அடையப் பற்றிய பளிங்கு போலும் ஒற்றி மாநக ருடையோய் உருவே.

எனவரும் இரண்டாவது பாடலில் விரித்துக் கூறுவர்.

" திருவொற்றியூரில் எழுந்தருளிய பெருமானே, மாதொருபாகனகிய நின்னைத் திருமாலென்றும் பிரமனென் றும் அருகனென்றும் புத்தனென்றும் பல்வேறு பெயர் களாற் சமய வாதிகள் பலர் மாறுபடக் கூறிஞலும் யாவர்க் கும் மேலாம் இறைவனுகிய நீ, அவ்வச் சமயத்தவர்களுக்கு அவரவர் நினைந்த திருமேனி கொண்டு தோன்றி அருள்