பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

பன்னிரு திருமுறை வரலாறு


வேண்டும் முறை படிப்போருள்ளத்தை யுருக்குவதாகும். இறைவனது மெய்ப்புகழைப் போற்றிப் பரவுவதாக அமைந்தது இப்பனுவலின் பத்தாம் பாடலாகும். இது திருவாசகத்திலுள்ள போற்றித் திருவகவலை யொத்து அமைந்துளது. திருவாசக முதலிய முன்னத் திருமுறை களில் திருவெண்காட்டடிகள் கொண்டுள்ள பேரார்வம் அவர் பாடிய செழும் பாடல்களால் நன்கு புலனதல் காணலாம்.

12. நம்பியாண்டார் நம்பி

பதினெராந் திருமுறை யாசிரியர்களுள் நம்பி யாண்டார் நம்பியும் ஒருவர். இவர் திருநாரையூரில் ஆதி சைவமரபில் தோன்றியவர். இளம் பருவத்திலேயே திரு நாரையூர்ப் பொல்லாப் பிள்ளை யாரால் ஆட்கொள்ளப் பெற்றமையால் நம்பியாண்டார் நம்பி யென வழங்கப் பெற்ருர். கருவிலே திருவுடையராய்ச் செந்தமிழ்ப் புல மையும் செம்பொருட்டுணிபும் நன்கு வாய்க்கப்பெற்ற இவ்வாசிரியர், தேவாரத் திருமுறையும் திருத் தொண்டர் வரலாறும் உலகமெங்கும் பரவுதல் வேண்டுமென விரும் பிய இராசராச அபயகுல சேகரனென்னும் சோழ மன்ன னது பேரார்வத்தை இனிது நிறைவேற்றுதல் வேண்டிப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்று மன்னனுடன் தில்லைக்குச் சென்று தேவாரத் திருமுறையைக் கண்டு அவற்றை முன் போல ஏழு திருமுறைகளாக வகுத் துதவிய செய்தி திருமுறை கண்ட புராணத்தில் விரித் துரைக்கப் பெற்றுளது. நம்பியாண்டார் நம்பியாகிய இத் திருவருட் செல்வர் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியும் பத்தாம் நூற்ருண்டின் தொடக்கமுமாகிய காலப் பகுதியில் வாழ்ந்தவரென்பது முன்னர் ஆராய்ந்து விளக்கப்பெற்றது. இவர் இயற்றியருளிய பனுவல்க ளாகப் பதினொாந் திருமுறையிற் பத்துப் பிரபந்தங்கள்

சேர்க்கப்பெற்றுள்ளன.

(1) திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலை

- இப்பிரபந்தம் திருநாரையூரிற் கோயில் கொண்டரு ளிய பொல்லாப் பிள்ளையாராகிய விநாயகப் பெருமானைப்

1. பன்னிரு திருமுறை வரலாறு, முதற் பகுதி-பக்கம் 15-20.