பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் §§

@ಪಿಸುST. திருவாதவூரடிகள் தமதுணர்வு முற்றும் மாறித் தம்மையாட் கொண்டருளிய இறைவன் பணித்த வண்ணம் தம்மிடமுள்ள பொன்னனைத்தையும் செலவிட்ட செய்தியை உடன்சென்ற பரிசனங்களால் அறிந்து சின முற்ற பாண்டியன், தன் அமைச்சராகிய வாதவூரர்க்குத்

fo - - -> -> o திருமுகம் எழுதித் தூதர்களை யனுப்பி அழைத்தனளுக, அந்நிலையில் ஒரு சிறிது தம்முணர்வு வரப்பெற்ற வாத வூரடிகள், தாம் மன்னனிடம் வாங்கிய பொன் திரளுக்குரிய குதிரைகளே வாங்கித் தந்து அப்பொன்னை ஈடு செய்ய முடி யாத நிலையில் இருத்தலை யெண்ணிப் பெருந்துறை யிறை வன்பால் வருந்தி முறையிட்டனர் என்பதும், இறைவன்

r- FO தும், இறை

யாமே குதிரைகளைக் கொண்டு வருவோம், நீ அச்சமின்றி மதுரைக்குச் செல்க என வாதவூரடிகளை நோக்கிக் கூறி யருளினர் என்பதும், அடிகளும் இறைவனது கட்டளையை ஏற்றுப் பாண்டியனை யடைந்து ஏற்பன கூறித் தமது பாரம் அனைத்தையும் தம்மையாண்டருளிய இறைவன் பாற் சார்த்தி இறைவனருளால் குதிரைகள் வந்து சேரும் என உறுதி யாக நம்பியிருந்தனரென்பதும், அடிகள் நம்பிய வண்ணமே பெருந்துறை யீசனும் அப்பக்கத்தில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கி அவற்றைச் செலுத்தும் குதிரைச் சேவளுகத் தம் பரிசனத்துடன் மதுரை நகரத்தே வந்து தோன்றினன் என்பதும்,

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி

பாண்டியன் றனக்குப் பரிமா விற்று

ஈண்டு கனகம் இசையப் பெரு அது

ஆண்டான் எங்கோன் அருள் வழி இருப்பத்

துண்டு சோதி தோற்றிய தொன் மையும் எனவரும் அடிகளது வாய்மொழியால் இனிது புலனுதல் காணலாம். அழகு பொருந்திய திருவடியால் இறைவன் என்னை ஆண்டுகொண்டருளிய நிலையில் பாண்டி வேந்த னுக்குக் குதிரைகளை விற்று (முன்பு யான் அவனிடம் பெற்ற) நிறைந்த பொன்னை ஈடு செய்யப் பெருது (வருந்திய நிலை யில்) என்னை அடிமை கொண்டவகிைய எம்பெருமான

<罗母

திருவருள் வழியே யடங்கி (நன்றே செய்வாய் பிழை செய் வாய் நானே இதற்கு நாயகமே என அமைதியுற்றிருந்தே ளுக, அந்நிலையில் இறைவனே (குதிரைகளைத்) தூண்டிச் செலுத்தும் சோதிப்பொருளாகத் தோன்றியருளிய பழைய செய்தியும்" என்பது மேற்காட்டிய தொடரின்பொருளாகும்.