பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாக் திருமுறை

சேக்கிழார் காயனர் வரலாறு

தெய்வ மனக்குஞ் செய்யுளெலாம் : எனப் போற்றப் பெற்ற சிறப்புடையது திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம். இவ்வருள்நூலை இயற்றியுதவிய பெரியார் அருண்மொழித் தேவதென்னும் பெயருடைய சேக்கிழார் நாயனராவர். இவரது வரலாற்றை விரித்துக் கூறும் நூல் திருத்தொண்டர்புராண வரலாறு எனப் பெயரிய சேக்கிழார் புராணமாகும். இதனை இயற்றியவர் சைவ சமய சந்தானுசாரியருள் ஒருவராகிய கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் என முன்னேர் கூறுவர். இந்நூல், பாயிரம் உட்பட நூற்று மூன்று செய்யுட்களால் இயன்றது இந்நூலிற் சொல்லிய வண்ணம் சேக்கிழார் நாயனரது வரலாற்றை ஒரு சிறிது நோக்குவோமாக. -

பாலாறு பாய்ந்து வளஞ்சுரக்கும் சிறப்புடைய தொண்டை நாட்டினைப் பண்டையோர் இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுத்தனர். அங்ங்ணம் பகுக்கப்பட்ட இருபத்து நான்கு கோட்டங்களுள் புலியூர்க் கோட்டமும் ஒன்று. அக்கோட்டத்தைச் சேர்ந்த குன்றைவள நாட்டின் தலைநகராகத் திகழ்வது குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குடும்பங்களில் ஒன்ருகிய சேக்கிழார் குடியினர் சிறப்புற்று வாழ்ந்தனர். பண்டை நாளிற் சோழன் கரிகாற் பெருவளத்தான் தொண்டை நாட்டிற் குடியேற்றிய நாற்பத்தெண்ணுயிரம் வேளாளர் குடும்பங் களுள் இச் சேக்கிழார் குடும்பமும் ஒன்ருகும். இவ்வாறு சோழ மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்ற குன்றத்துார்ச் சேக்கிழார் குடும்பத்திலே அருண்மொழித் தேவர், பாலருவாயர் என்னும் இருவரும் சகோதரராய்ப் பிறந்து வளர்ந்தார்கள். இவ்விருவருள் மூத்தவர் அருண்மொழித் தேவர். அவர்க்கு இளையவர் பாலருவாயர். இவ்விருவரும் கல்வித்துறையில் தேர்ச்சி பெற்று விளங்கினர்கள். அருண்மொழித் தேவருடைய கல்வியறிவொழுக்கங்களை நன்குணர்ந்த சோழ மன்னன், அவரைத் தன் அரசியலில்