பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயஞர் வரலாறு ፳፻፰

மாகும். அடியார்களின் புகழ்த் திறத்தினைப் போற்றிப் பரவும் அத் திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூரி லெழுந்தருளிய பொல்லாப்பிள்ளை யார் பொருளருளிச் செய்யக் கேட்டுர்ைந்த நம்பியாண்டார் நம்பிகள், அத்திருப்பதிகத்திற் போற்றப்பெற்ற சிவனடியார்களின் வரலாற்றை வகைப்படுத்து விளக்கு முகத்தால் திருத்தொண்டர் திருவந்தாதி யென்றதொரு வகை நூலைச் செய்து தவிஞர். அத் திருவந்தாதியைத் திருமுறை கண்ட ராசராச தேவர், சிவாலய தேவர் முதலாகவுள்ள பெரியோர்கள் அனைவரும் உளமுவந்து இனிமையுடைய தெனப் பாராட்டினர்கள் எனக்கூறிஞர். அதுகேட்ட சோழன், அத் திருவந்தாதியை ஒதிப் பொருள் கூற வேண்டுமென வேண் டிஞன். அருண்மொழித் தேவரும் அந் நூற் பொருளை மன்னனுக்கு எடுத்துரைத்தார் திருத்தொண்டத் தொகையிற் கூறப்பெற்ற சிவனடியார் களின் உண்மை வரலாறுகளைக் கேட்டு உளமுருகிய வேந்தன், இறைவனது திருவருளே நினைந்து திருத் தொண் டர் வரலாறுகளே யாவரும் தெளிவாய் அறிந்து கொள்ளும்படி சுவைமிக்க செந்தமிழ்ப் பெருங்காப்பிய மாகப் பாடி உதவுதல் வேண்டும் ' எனத் தன் அமைச்ச ராகிய சேக்கிழாரை வேண்டிக் கொண்டு பெரும்பொருளை யும் வழங்கினன். அரசனது வேண்டுகோளுக்கிணங்கிய அருண்மொழித் தேவர். தில்லையை யடைந்து சிவகங்கை யிலே நீராடித் தில்லையம்பலவாணனைத் தொழுது போற்றி, ' பெருமானே, நின்பால் அன்புமிக்க அடியார்களின் வரலாறுகளைப் பெருங்காப்பியமாக அடியேன் விரித்துப் பாடுதற்கு அடியெடுத்துக் கொடுத்தருளல் வேண்டும் ” என உளங்க சிந்து வேண்டி நின் ருர். அந்நிலையில் அங்குள்ளார் அனைவரும் கேட்கத் தில்லையம்பல வன் திருவருளால் உலகெலாம் என் ருெரு வானெலி யெழுந் தது. அதனைக் கேட்டு மகிழ்ந்த தில்லைவாழந்தணர்கன், கூத்தப்பெருமானுக்குச் சாத்திய திருநீற்றையும் திருமாலை யையும் திருப்பரிவட்டத்தையும் அருண்மொழித் தேவர்க் குச் சாத்தினர். அருண்ம்ொழி க் தேவர், திருநெறித் தலைவராகிய திருஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவசையும் வணங்கிப் போற்றிச் சிவசின்னங்கள்

அணிந்து ஆயிரக்கால் மண்டபத்தில் அமர்ந்திருந்து,