பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயனர் காலம் శ్రీ{

பேராடுகள் உதவிய செய்தி குறிக்கப்பட்டுளது. சேக்கிழார் புராணத்தே உமாபதி சிவாசாரியதர்,

அத்தகைய புகழ்வேளாண் மரபிற் சேக்கி

ழார் குடியில் வந்த அருண்மொழித்தே வர்க்குத் தத்துபரி வளவனுந் தன் செங்கோலோச் சுந்

தலைமையளித் தவர் தமக்குத் தனது பேரும் உத்தம சோழப்பல்ல வன்ருனென்னும்

உயர்பட்டங் கொடுத்திட ஆங்கவர் நீர்நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்திலன்பு

நிறைதலிளுல் மறவாத நிலைமை மிக்கார் எனச் சேக்கிழார் நாயனாது வரலாறு கூறுகின்ருர். அவ் வாசிரியர் கூறுமாறு சேக்கிழார் குடியிற் பிறந்து உத்தம சோழப் பல்லவனென்னும் பட்டம் பெற்றுத் திகழ்பவர், திருமழபாடிக் கோயிலுக்கு விளக்கெரிக்க நிபந்தம் வழங் கிய குன்றத்துார்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவ ஞன உத்தம சோழப் பல்லவராயன் ' என்னும் இத்தலை வ ராவார். இவர் சேக்கிழான் மாதேவடிகள் எனச் சிறப் பிக்கப் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால். சேக் கிழார் குடியிற் பிறந்து மாதேவனகிய சிவபெருமானிடத்து ஒன்றிய சிந்தையராய்ப் பேரன்பு செலுத்தியவர் இவரென் பது நன்கு புலனும். இவரது இயற்பெயர் ராமதேவன் என இக்கல்வெட்டுக் கூறுகின்றது. (சேக்கிழாரது இயற் பெயர் அருண்மொழித் தேவன் என உமாபதி சிவாரி யார் கூறுவர். அருண்மொழித் தேவன் என்பது, முதல் இராசராச சோழனது பெயராகும். அதுவே சேக்கிழார்க் கும் உரிய இயற்பெயராக அவருடைய முன்ஞேர்களால் இட்டு வழங்கப்பெற்றிருத்தல் கூடும்.) சேக்கிழான். மாதேவடிகள் இராமதேவனென் பார், திரிபுவனச் சக்கர வர்த்தி ராஜ ராஜ சோழனது 17-ம் ஆட்சியாண்டில் திரு மழபாடிக் கோயிலுக்கு நிபந்தம் அளித்துள்ளமையால் இரண்டாங் குலோத்துங்கனுக்கு மகளுகிய இரண்டாம் ராச ராச சோழனது 17-ம் ஆட்சியாண்டின் பின்னரும் வாழ்ந்திருந்தவரென்பது பெறப்படுகின்றது. சேக்கிழார் காலத்துச் சோழ மன்னன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர் கொண்டவனென்பதும், குலோத்துங்கனென்னும் இயற்பெயருடையவனென்பதும், அவனது சிவபத்தி மாண் பினைச் சிறப்பித்துப் போற்றும் பெரிய புராணச் செய்யுட் களால் நன்கு தெளியப்படும். அநபாயன் என்னும் சிறப்புப்