பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழா: நாயகுர் காலம் 霧黛

குலோத்துங்கன் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படவில்லை. இது மூன்ருங்குலோத்துங்கசோழன் காலத்தில்தான் பேரம்பலம்பொன்வேய்த்தபெருமாள் நல்லூர் என்ற பெய ரால் வழங்கியதென்பது அவன்காலத்துக் கல்வெட்டால் தெரிகிறது. எனவே மூன்ருங்குலோத்துங்கனுக்குப் பேரம் பலம் பொன்வேய்ந்தபெருமாள் என்றதொரு சிறப்புப் பெயருண்மை புலனுகின்றது. தென்னிந்தியக் கல்வெட்டு ஏழாந்தொகுதியில் 1044-ம் எண்ணுள்ள கல்வெட்டு பூமன் னுதென்கவிர்நாட்டு ' எனத்தொடங்குதலின் அது இரண்டாங்குலோத்துங்கன் காலத்ததென்பது உய்த் துணரப்படும். அதன்கண் "பேரம்பலம் பொன் மேய்ந்த கோராஜகேசரிபத்மரான" எனக்கானப்படுந்தொடர் அக் கல்வெட்டின் உண்மை வடிவமன்று. " பொ(ல்னம்பலம் பொன்மேய்ந்த கோராஜகேசரிபத்மரான" என்பதே அதன் உண்மைவடிவாகுமென்பது புதுக்கோட்டைச் சமஸ்தானத் தார் வெளியிட்ட கல்வெட்டுத்தொகுதியில் 120-ம் எண் ணுள்ள இக்கல்வெட்டினைப் படிப்பார்க்கு இனிது விளங் கும். ஆகவே பேரம்பலம் பொன் மேய்ந்த பெருமாள் என்ற சிறப்புப் பெயராற் குறிக்கப்பட்டவன் இரண்டாங் குலோத்துங்கன் அல்லன் என்பதும் மேற்குறித்த திருப்புறம பயக் கல்வெட்டிலும் திருமாணிகுழியிலுள்ள கல்வெட்டிலும் கண்டபடி அச்சிறப்புப்பெயர் மூன் ருங் குலோத்துங்க சோழனுக்கேயுரியதென்பதும் ந ன் கு துணியப்படும்.

திரிபுவன வீரேச்சுரத்திற் பொறிக்கப் பெற்ற வட மொழிச் சுலோகங்களில் மூன் ருங்குலோத்துங்கன் பேரம் பலம் பொன்வேய்ந்த செய்தி கூறப்படவில்லையென்றும் அவன் பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தவனல்லனென்றும் கூறுவாருமுளர், "எத்தசையுந்தொழுமிறைவற் கெதிரம் பலஞ் செம்பொன்வேய்ந்து" என்பது மூன் ருங்குலோத் துங்கனது மெய்க்கீர்த்தி யாதலின் பேரம் பல ம் பொன் வேய்ந்தவன் மூன் ருங் குலோத்துங்கனே வென்பது தேற்றம். அன்றியும் திரிபுவன வீரே ச்சுரத்திற் பொறிக்கப் பட்ட வட மொழிச சுலோக மொன்றில் மூன் ருங்குலோத் துங்கன் தில்லையில் முகமண்டபத்தைப் பொன்மயமாக்கிய

1. பெரியபுராண ஆராய்ச்சி பக். 21.