பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穩 参 i இன்

கு திருமுறை வரலாறு

வழங்கியுள்ளார். இவரது தமையனராகக் கருதப்படும் " ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக் கிழான் மாதேவடிகள் ராம தேவனை உத்தமசோழப் பல்லவராயன் " என்பார் திரிபுவனச் சக்கரவர்த்தி ராசராசதேவரது 17-ம் ஆட்சி ஆண்டில் திருமழபாடித் திருக்கோயிலுக்குத் திருநொந்தா விளக்கின் பொருட்டுத் தொண்ணுறு ஆடுகள் வழங்கிய, செய்தி அவ்வூர்க் கோயிலில் வரையப்பெற்றுள்ள கல் வெட்டிற்குறிக்கப்பட்டுள்ளது. மூன் ரும் குலோத்துங் கன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலும் மூன்ரும் ராசராசனது ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டிலும் முறையே கோட்டுரிலும் திருவரத்துறையிலும் நி ப ந் த ம ளி த் த சேக்கிழான் பாலருவாயன் களப்பாளராயன் என்பார் சேக் கிழார் புராணங் கூறியபடி உத்தம சோழப் பல்லவ னென்னும் பட்டம் பெற்ற சேக்கிழார் நாயனருடைய தம்பியெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடைய தாகும். இவர் மூன்ரும் குலோத்துங்கன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலேயே திருக்கோயிலுக்கு நிபந்த மளிக்கத்தக்க சமயப்பயிற்சியுடையவராகத் திகழ்தலாலும் இவருடைய தமையனராகக் கருதப்படும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனை உத்தமசோழப் பல்லவர்ாயர் இரண்டாம் இராசராசசோழனது ஆட்சியின் இறுதிக் காலத்திலேயே திருமழபாடித் திருக்கோயிலுக்கு நிபந்த மளித்திருப்பதாலும் மூன்ருங்குலோத்துங்க சோழனது ஆட்சிக்கு முன் அவன் தந்தை இரண்டாம் ராசராச சோழ னது ஆட்சியின் இறுதியிலேயே சேக்கிழார் சோழர் ஆட்சி யிற் பணிமேற்கொண்டன ரென்பது நன்குபெற படும்.

6. இரண்டாம் ராசராச சோழன் இறக்குங்கால் அவனுடைய பிள்ளையாகிய மூன்ருங் குலோ த்துங்கனுக்கு மூன்றுவயது நிகழ்ந்ததென்பதும், அக்குழந்தை ஆட்சிக்கு உரியபருவம் அடையும் வரையில் இரணடாம் ராஜாதி ராஜனே ஆளுதல் வேண்டுமென இரண்டாம் ராசராசன் நியமித்துவிட்டு இறந்தானென்பதும், பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டால் நன் குபுலனும்: இளம்பருவத்தவ

i. M. E. R. No. 95 of 1920. 2. Ep. Ind, vot. XXI, No. 31.