பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬍魯 பன்னிரு திருமுறை வரலாறு

புராணமென்னும் பெருங்காப்பியத்தைப் பாடச் செய்தனன் என்பதும் வரலாற்றுக்கு ஒத்த நிகழ்ச்சிகளேயாகும்.

7. திருத்தொண்டர் புராண வரலாற்றை விரித்துப் பெருங்காப்பியமாக இயற்றித் தருதல் வேண்டுமென்னும் மன்னனது வேண்டுகோட்கிணங்கிய சேக்கிழார், தில் இலக் குச் சென்று கூத்தப் பெருமானையும் திருமுறை ஆசிரியர் கலையும் இறைஞ்சிப் போற்றித் தில்லையம்பலவன் திருமுன் நின்று, " எம்பெருமானே, அடியேன் உம்முடைய அடியார் களாகிய திருத்தொண்டர்களது அடிமைத் திறத்தை விரித்துப் பெருங்காப்பியமாகப் பாடுதற் பொருட்டு அடியெடுத்துத் தந்தருளவேண்டும், என வேண்டி நிற்க அந்நிலையில் உலகெலாம் என்றதொரு வானிழலொலி தோன்றிய தென்றும், அதனை முதலாகக் கொண்டு ஆயிரக் கால் மண்டபத்திலிருந்து திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தாரென்றும் சேக்கிழார் புராணம் கூறும். ஆயிரக்கால் மண்டபத்தை முதன் முதற் கட்டி நிறை வேற்றியவன் மூன்ருங் குலோத்துங்க சோழனுவன். இவன் காலத்திற்கு முன்பு ஆயிரக்கால் மண்டபம் யாண்டும் கட்டப்பெற்றிருந்ததில்லை யென்பது ஆராய்ச்சியாளர் துணிபு.’ இவ்வேந்தனது படைத்தலைவன் அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டாளுகிய கண்டர் சூரியன் என் பான் திருவக்கரையில் தன் பெயரால் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபத்தைக் கட்டிமுடித்த னென்று அவ் ஆர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. திருவாரூரில் ஆயிரங்கால்களை யுடையதாய் விளங்கும் சபா மண்டபத் தைக் கட்டியவன் இம்மூன் ருங் குலேத்துங்கனே யாவன். இச்செய்தி திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள வடமொழிக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. திருவாரூரிலுள்ள இச்சபா மண்டபத்தினையே ஆசிரியர் சேக்கிழார்

1. ஆயிரக்கால் மண்டபம் விஜயநகர வேந்தர் காலத்தில் தான் முதன் முதல் கட்டப்பட்டதென்பர் சிலர். ஆன்ருேர் கூற்றுப் பொருந்தாதென்பது, மூன் ருங் குலோத்துங்கன் காலத்திலேயே திருவாரூர், திருவக்கரை, தில்லை முதலிய இடங்களில் ஆயிரக்கால் மண்டபம் கட்டப் பெற்றிருத்தலால் நன்கு புலளும்

2. Ins. 190 of 1904.

3. Ins. 190 of 1907.