பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயஞர் காலம் 323

அடியார்களின் திருவுருவங்களும் அவ்வத் திருவுருவத்தின் கீழ் அவரவர்களுடைய வரலாற்றுக் குறிப்பொடு தொடர்ந்த பெயர்களும் பொறிக்கப் பெற்றிருத்தலே எடுத் துக்காட்டி, இரண்டாம் ராசராச சோழன் காலத்திற்கு முன்பே சேக்கிழார் பெரிய புராணம் பாடியிருத்தல் வேண்டுமென்பர். இங்கே குறிக்கப்பெற்ற இத் திருவுரு வங்களே அமைத்தற்கும் பெயர் பொறித்தற்கும் வேண்டிய வரலாற்றுக் குறிப்புக்கள் யாவும் இரண்டாம் ராசராசன் காலத்திற்கு முன்னரே பெருக வழங்கியன என்பது நம்பி யாண்டார் நம்பிகள் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய திருமுறைகளாலும், இவ்வேந்தன் காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் திருத் தொண்டத் தொகையடியார் களைக் குறித்து ஆங்காங்கே காணப்படும் குறிப்புக்களாலும் நன்கு புலகு கும். ஆகவே இத் திருவுருவங்களே அமைத்தற்குச் சேக்கிழார் பெரிய புராணமே வழிகாட்டியாயிருந்ததென்று உறுதியாகச் சொல்லுதற்கில்லை. அன்றியும் " தாரணி கொள் திருத் தாதைக்கும் இராச ராசீச்சுரத்தார்க்கும், காரணச் சிறந்த கோயில் அணி திகழ் பொன் வேய்ந்தருளி ' எனவரும் மூன்ருங் குலோத்துங்கனது மெய்க் கீர்த்தியால் அவ் வேந்தன் தன் தந்தையாகிய இராசராச சோழனுற் கட்டப் பெற்ற இராச ராசபுரத் திருக்கோயிலை மேலும் விரிவுபடுத் திஞனென்ற செய்தி புலப்படுத்தப்பட்டுளது. இவளுற் கட்டப்பட்ட திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலுக்குக் கடவுள் மங்கல விழாவைச் சிறப்புற திகழ்த்தியவரும் இவன் குருவுமாகிய ஈசுர தேவரென்னும் ஈசான தேவர்க்கு இராச ராசபுரத் திருக்கோயிற் கோபுரத்தில் படிமம் அமைக்கப்பெற்றுளது. இவ்வரலாற்றுக் குறிப்புக் களை உற்று நோக்குங்கால் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார் திருவுருவங்களை இராச ராசபுரத் திருக்கோயிலில் அமைத்தவன் மூன்ருங் குலோத்துங்க சோழனுகவும் இருத்தல் கூடும் எனக் கருத இடமுண்டு.

சேக்கிழார் இரண்டாங் குலோத்துங்கன் காலத்தில் இத்திருத் தொண்டர் புராணத்தைப் பாடியிருப்பாராயின் அவன் காலத்துக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்ட திருத்

1. பெரிய புராண ஆராய்ச்சி பக். 28, 29 (மா. இராச மாணிக்களுர்)