பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 831

வரலாறுகளை விரித்துரைக்கும் விரிநூலாகச் சேக்கிழார் அடிகள் இத்திருத்தொண்டர் புரணத்தை இயற்றியுள்ளார். இந்நுட்பம், திருத்தொண்டத் தொகை விரி இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் ' எனவும், மற்றிதற்குப் பதிகம் வன்ருெண்டர்தாம், புற்றிடத்தெம் புராணர் அருளினல், சொற்ற மெய்த் திருத்தொண்டத் தொகை யெனப், பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம் ' எனவும்,

" அந்த மெய்ப்பதிகத் தடியார்களை

நந்தம் நாதனும் நம்பியாண்டார் நம்பி புந்தியாரப் புகன்ற வகையிஞல் வந்தவாறு வழாமல் இயம்புவாம் " (திருமலைச் 37 - 39)

எனவும் வரும் அவருடைய வாய் மொழிகளால் இனிது

விளங்கும்.

திருத்தொண்டத் தொகையைப் பதிகமாகவும், திருத் தொண்டர் திருவந்தாதியை வகை நூலாகவும் கொண்டு, திருத்தொண்டத் தொகையின் விரியாகப் பெரிய

புராணத்தை இயற்றியளித்த சேக்கிழாரடிகளை,

தொகையாநாவலு ராளி தொடுத்த திருத்தொண்டப் பெருமை வகையால் விளங்க வுயர் நம்பியாண்டார் வகுப்ப மற்றதனைத் தகையா அன்பின் விரித்துலகோர் தம்மையடிமைத் திறப்பாட்டின் உகையா நின்ற சேக்கிழான் ஒளிர் பொற் கமலத்தாள் பணிவாம் :

எனக் கச்சியப்ப முனிவர் போற்றியுள்ளமை இங்குக் கருதத் தகுவதாகும்.

தமிழகத்திற் பல காலங்களிலும் பல ஊர்களிலும் பல வேறு குடும்பங்களிலும் பிறந்தருளி, எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளிலும் அவனைப் போற்றுமியல்பின ராகிய மெய்யடியார்கிள் திறத்தும் பேரன்புடையராய், ஐம்புலவுணர்வுகளை யடக்கி நன்னெறிக்கண் ஒழுகும் செம்புலச் செல்வர்களாகிய சிவனடியார்களின் வரலாறு களைத் தொகுத்து ஆராய்ந்து உயர்வு நவிற்சியின்றி மெய்ம்மை வரலாறுகளே விரித்துரைக்கும் முறையில் இனிய, எளிய, தூய செந்தமிழ் நடையிற் பெருங்காப்பிய மாக இயற்றிய பெருமை அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகட்கேயுரிய தனிச் சிறப்பாகும்.