பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் స్టో?

திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய வன்ருெண்ட ளுகிய சுந்தரன் எம் பெருமான் திருவருளால் மீண்டும் கயிலைக்கு எழுந்தருளுகின்ருன்’ என உணர்ந்து, இரண்டு கைகளையும் தலே மேற்குவித்து எழுந்து வணங்கி, உவகைக் கண்ணிர் தம் மெய்யெல்ாம் படிய, நம்பியாரூரரை வரவேற் லுப் போற்றும் கருத்துடன் எதிர் செல்வாராயிஞர். அப் பொழுது அவரைச் சூழ இருந்த முனிவர்கள், முனிவர் பெருமாளுகிய அவரை நோக்கி, எம்பெருமானே சிவ பெருமானது செந்தாமரை மலர் போலும் திருவடிகளை யன்றி வேறு யாவரையும் தலே தாழ்த்தி வணங்காத தேவரீர் கை கூப்பி எழுந்து வணங்கும் இது என்னே ? எனத் தம் உள்ளத்தில் தோன் றிய ஐயம் நீங்க வியப்புற்று வின விஞர்கள். தம்பிசாளுகிய சிவபெருமானைத் தன் உள்ளத் திற் கொண்டு போற்றும் பேரன்புடைய பெரியோன் இப் பொழுது இங்கு எழுந்தருளி வரும் நம்பியா குரளுவான். அவன் முற்றத் துறந்த முனிவர்களாகிய நம் எல்லோரா லும் தொழப்பெறும் தகுதியுடையனவான்’ என உபமன்னிய முனிவர் நம்பியாரூரது பெருமையினை ஏனைய முனிவர் களுக்கு அறிவுறுத்தியருளினர். ஆரூரரது பெருமையினை உளங் கொண்ட அம் முனிவர்கள், வென்ற பேரொளியா ராகிய வன்ருெண்டரது மேலாகிய தவத்தின் பெற்றியினைப் பெரிதும் கேட்டுமகிழும் பெருவேட்கையுடையோம். அதனை இன்று எங்களுக்கு விரித்து உரைத்தருளுதல் வேண்டும் என உபமன்னிய முனிவரை இறைஞ்சி வேண்டிஞர்கள். முனிவர் பெருமானும் அம் முனிவர்களுக்கு வன்ருெண்டர் வரலாற்றை உள்ளவாறு விரித்துக் கூறியருளிஞர். அது கேட்ட முனிவர்கள், பாசப் பிணிப்புடைய மக்கட் குலத் தார் வாழும் தென் திசை இவ்வாறு ஆலால சுந்தரர் அவதரித்தருளும் நிலையில் இந் நிலவுலகில் எண் திசைக ஒளிலும் மேற்பட்டு விளங்குதற்கு வந்த புண் ணியச் சிறப் பினையுடையதாதல் எவ்வாறு' என மீண்டும் வினவிஞர் கள். அது கேட்ட மாதவச் செல்வராகிய உபமன்னிய முனிவர், ஒப்பற்ற தவப் பெருஞ் செல்வராகிய எம். தந்தையார் புலிக்கால் முனிவர் இறைவனை வழிபட்டுப் போற்றிய பெருமையுடையதும் ஈசனுக்கே அன்புடைய ஒருமையாளராகிய அந்தணர்கள் விருப்புடன் தங்கிய சிறப் புடையதுமாகிய பெரும் பற்றப் புலியூர் என்ற திருத்தலம் தென் திசையிற் சிறப்புற்று ஓங்கியுள்ளது. அத் திருப்பதி