பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் §5?

செலுத்தவேண்டிய ஆறிலொன்ருகிய கடமையினை முதற்கண் செலுத்தி, எஞ்சியவற்றைக்கொண்டு செய்யத் தகுந்த நல்லறங்களை விரும்பிச் செய்து, பரவி வழிபடுதற்குரிய அருமைவாய்ந்த கடவுட் பூசனையினைப் போற்றிச் செய்து, தம்குலத்து முன்ஞேர்களையும் விருந்தினரையும் நற்பண்புடன் கூடிய சுற்றத்தார்களையும் பாதுகாத்துப் புகழால் விளக்கமுற்று வாழும் குடிமக்களால் நிரம்பப்பெற்று மலைபோன்று உயர்ந்த மாடமாளிகைகள் சோழநாட்டு ஊர்கள்தோறும் தொடர்ந்து நிலைபெற்று உள்ளன என்பது இச்செய்யுளின் பொருளாகும். இக் செய்யுள்,

  • தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்ருங்

கைம்புலத்தா ருேம்பல் தலை

எனவரும் திருக்குறளுக்கு விரிவுரைபோன்று அமைந் துள்ளமை காணலாம். உலகியலில் மக்கள் வாழ்க்கை செவ்விதின் நிகழ்தற்கு அரணுயமைந்தது அரசியல் நெறியாகும். எனவே அந்நெறிமுறையினைப் பேணிக் காக்கும் அரசர்க்குரிய கடமையினை ஆற்றுதல் குடிமக்களது முதற்கடமை என்பார், அரசுகொள்கடன்கள் ஆற்றி என அதனை முதலாவதாகக் குறித்தார். கடவுள் -தெய்வம் குரவர்-தம் குடியின் முன்னேர். விருந்து-விருந்தினர். கிளை-சுற்றத்தார். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்னும் ஐந்திற்கும் ஐந்துகூறு வேண்டுதலால் அரசர்க்குத் தரு தற்குரிய வரிப்பொருள் ஆறில் ஒன்ருயிற்று என்னும் உண்மையினைப் புலப்படுத்தும் நிலையில் சேக்கிழாரடிகள் இச்செய்யுளை அமைத்துள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும்.

சோழநாட் டுர்களின் உள்ளேயுள்ள மாடங்களிலும் புறத்தேயுள்ள சோலைகளிலும் மிக்குச் சூழ்ந்துள்ள புகைகளின் திறத்தால் அந்நாட்டுக் குடிமக்களின் அறம் பொருளின் பச் சிறப்பினேயும் அவற்றுக்குக் காரணமாகிய வான் சிறப்பினையும் வகுத்துரைப்பதாக அமைந்தது, * கரும்படு களம சாலைக் கமழ்நறும் புகையோ மாதர் சுரும்பெழ வகிலா லிட்ட துாபமோ யூப வேள்விப் பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின் வருங்கரு முகிலோ சூழ்வ மாடமுங் காவு மெங்கும் ”