பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8穹兹 பன்னிரு திருமுறை வரலாறு

போந்த சேக்கிழாரடிகள், மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த மனுவேந்தனது அரசியல் மாண்பினை விரித் துரைத்து, அவனது வென்றிச் சிறப்புக்கு உறுதுணையாக அகத்தும் புறத்தும் அருள் வழங்கிய அறவனுர் எழுந் தருளிய பூங்கோயில் திருவாரூர் நகரத்துக்கு அகமலராகத் திகழும் சிறப்பினை முடிபொருளாக அமைத்துக் கூறியுள் ளமை கூர்ந்து சிந்திக்கத் தகுவதாகும்.

"அறவஞரடி சென்று சேர்வதற் கியாது மையுறவில்லையே

ጙጅ

என்ற தொடரில் இறைவனை அறவளுர் என்ற பெயரால் நம்பியாரூரர் போற்றுதலும், அறவாழியந்தனன் எனத் திருவள்ளுவர் குறித்துள்ளமையும் இச்சரிதத்தின் கருப் பொருளாய் அமைந்திருத்தல் இக்காப்பியத்தைப் பயில் வோர் உளங்கொளத்தக்க சிறப்பினதாகும்.

திருக்கூட்டச் சிறப்பு

திருவாரூர்ப் பூங்கோயிலின் முன்றிலில் உள்ள தேவா சிரிய மண்டபத்திலே எழுந்தருளியிருக்கும் அடியார் திருக் கூட்டத்தின் சிறப்பினை விளக்கும் பகுதியாதலின் இது, திருக்கூட்டச் சிறப்பு என்னும் பெயர்த்தாயிற்று. பதினுெரு செய்யுட்களால் இயன்றது இப்பகுதி.

திருவாரூர்ப் பூங்கோயிலின் திருமதில் வாயிலையடுத்துத் திருக்கோயிலின் முன்றிலிலே நான்முகன் இந்திரன் திருமால் முதலிய தேவர்கள் ஒவாது நிறைந்துறையும் சிறப்பினது தேவாசிரியன் என்னும் திருமண்டபமாகும். துன்பத்தைத் தீர்க்க வல்ல அருளாளர்களாகிய சிவனடி யார்களின் திருமேனியின்மேல் நிரம்பிய திருநீற்றின் ஒளியாலும் உள்ளத்தூய்மையாலும் அன்புடன் ஒதும் திருவைந்தெழுத்தின் ஒசை பொலிதலாலும் பரவிய ஆயிரம் பாற்கடல்கள் ஒன்று சேர்ந்தாற் போன்று விளங்குவது அத்திருமண்டபமாகும். எல்லா உலகங்களுக்கும் முதல்வ ராகிய இறைவரது திருவடிகளைத் தொழுது இங்கு எழுத் தருளியிருக்கும் திருத்தொண்டர்களே எல்லாவுலகங்களை யும் ஆளுதற்குரியவர்கள் என்றுணர்ந்து இவர்கள இறைஞ்சிப் போற்ற எல்லாவுலகங்களிலுள்ளாரும் இங்கு வந்து நிறைதலால் இத்திருமண்டபத்தின் இடப்பரப்பு