பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/890

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 பன்னிரு திருமுறை வரலாறு

என்றும் விரும்பி வேண்டுவதன்றி அம்முதல்வனோடு பிரிவற ஒன்றிப் பெறும் வீடுபேற்றின்பத்தையும் வேண் டாத வீறுபெற்று விளங்குபவர்கள். அவர்கள் தம் மெய்க் கணியாக விரும்பி பூணும் ஆரம் உருத்திராக்க மாலேயே. உடுப்பது கந்தை உடை. தாம் செய்தற்குரிய கடமைப் பாரமாக மேற்கொண்டிருப்பது இறைவன் திருவடிப் பணியன்றி வேருென்றும் இல்லாதவர்கள். இத்தகைய பெருமக்களது வீரம் என்னுல் அளவிட்டுச் சொல்லுந் தன்மையதோ ? தாண்டவப் பெருமான் தனித்தொண்ட ராகிய இவர்கள் கண்டார் விருப்புறும் நிலையில் தாம் தாம் விரும்பிய கோலங்களைக் கொண்டவர்கள் ; நெடிதாய்த் தொன்று தொட்டு உளதாகி வரும் புகழை உடையவர்கள். இப்பெருமக்களின் திருத்தொண்டின் நிலைமையை இங்கு வாழ்த்தப் புக்கேளுகிய எளியேன் எங்ஙனம் அறிந்து துதிக்கவல்லேன்? " என அடியார் திருக்கூட்டத்தின் சிறப்பினை விரித்துரைத்த ஆசிரியர், 'இத்தகைய பெருந் தவச் செல்வர்களாகிய அடியார் திருக்கூட்டத்தினரை முடிவில்லாத புகழினையுடைய ஆலால சுந்தரன் என்னும் பெருந்தகை இவ்வுலகிலே வந்து சுந்தரத் திருத்தொண்டத் தொகைத் தமிழ் பாடிய வரலாற்றை இனிச் சொல்லத் தொடங்குவோம்" என அடுத்துவரும் தடுத்தாட் கொண்ட புராணத்திற்குத் தோற்றுவாய் செய்து கொள்கின்ருர்,

திருக்கூட்டச் சிறப்பு’ என்னும் இப்பகுதி, திருக் குறளில் உள்ள நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தை அடியொற்றி, இத் திருத்தொண்டர் புராணத்திற் போற்றப் பெறும் அளவிலாத பெருமைய ராகிய அளவிலா அடியார்களின் பெருமையினைத் தொகுத்து விளக்கும் முறையில் அமைந்ததாகும். திருத்தொண்டர் களின் பெருமையினை அவர் தம் திருக்கூட்டத்துடன் இயைத்துப் பொதுவகையாற் கூறும் பகுதியில் சிவனடியார் இயல்புகளாகத் தொகுத்துரைக்கப்பட்டவை, இதன் பின்னர்க் கூறப்படும் தனியடியார் வரலாறுகளில் அவரவர்பால் அமைந்த சிறப்பியல்புகளாகத் தனித்தனியே வகுத்து விளக்கப் பெற்றுள்ளன. இக்காப்பியத்தில் பின்னர் விரித்துரைக்கப் பெறும் அடியார்களின் வரலாற்றுப் பண்புகளின் தொகுப்பே திருக்கூட்டச் சிறப்பு