பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 பன்னிரு திருமுறை வரலாறு

தூய வெண்ணிறு து ைதந்த பொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்

சொல் மேய செவ்வாயும் உடையாச் புகுந்தனர் வீதியுள்ளே'

(பெரிய - திருநாவுக்கரக-140)

என்ருங்கு இக்காப்பியத்திற் கூறப்படும் அடியார்களது அன்பின் திறத்தைப் புலப்படுத்துவதாகும்.

  • கைத்திருத்தொண்டு செய் கடப்பாட்டிஞர்' என்றது, "என்கடன் பணிசெய்து கிடப்பதே (5-19-9) எனவும்,

' கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான்

செய்யேனோல் அண்டம் பெறினும் அது வேண்டேன்" (அற்புதத்திரு-72)

எனவும் திருத்தொண்டில் உறைத்து நிற்கும் உள்ள முடையராய், " ஐயனர்க்கு ஆளாகி அன்புமிக்கு அகங் குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதம் கையிற்ை ருெழும் அடியார் " களாகிய திருத்தொண்டர்களைக் குறித்தது.

' மாசிலாத மணிதிகழ், மேனிமேல் பூக நீறுபோல் உள்ளும் புனிதர்கள்' என்றது, சுத்தமதாவது நீறு எனப்பெற்ற தூய வெண்ணிறு துதைந்த பொன் மேனிய ராய்க் காம வெகுளி மயக்கங்களாகிய மனமாசு நீங்கி நாயகன் சேவடி தைவரும் தூய சிந்தையினராகிய அடியார்களைக் குறித்தது. தேசினல் எத்திசையும் விளக்கினர் என்றது. தாம் இவ்வுலகில் உள்ள காலத் திலேயே எத்திசைகளையும் விளக்கும் ஒளிமிக்க திருமேனி யுடையவர்கள் என்றவாறு. திருக்காளத்திமலையில் இறைவனை அன்பினல் வழிபட்டு அல்லுறங்காது நிற்கும் திண்ணனரது திருமேனியொளியில்ை இரவின் இருள் இல்லையாயிற்று என்பதனை,

ஐந்துமா றடக்கியுள்ளார் அரும்பெருஞ் சே திவாலும் எந்தையார் திருக்காளத்தி மலையினில் இனவொன்றில்லை"

(பெரிய கண்ணப்பர் 13)

எனவரும் தொடரில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். .