பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880 பன்னிரு திருமுறை வரலாறு

அப்பரடிகளது உள்ளத்துறுதியினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்திருத்தல் காணலாம். கோதிலாத குணப்பெருங் குன்றனர்' என்றது, ' குணமென்னுங் ஆன்றேறிநின்ருர் (திருக்குறள் 29) என ஆகும் தெய்வப் புலவர் வாய்மொழியைப் பொன்னே போற் போற்றியதாகும்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர் என்றது, சிவமே பெறுந்திருவினர் என்பதாம். ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்' எனவரும் இத்தொடர்ப் பொருளே,

  • புல்லோடும் கல்லோடும் பொன்ளுேடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர் ” (திருநாவுக்கரசர் புராணம் - 4.18) என வரும் பாடலில் ஆசிரியர் விரித்து விளக்கியுள்ளார்.

' கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி

விடும் வேண்டா விறலின் விளங்கிளுர்

என்றது,

கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன்' (அற்புத - 72)

எனவரும் அம்மையார் வாய்மொழியை அடியொற்றி யமைந்தமையும், இக்கருத்து,

தங்குபிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் :

(பெரிய - திருதாவுக் - 312) எனப் பின்னர் விளக்கப்பெற்றுள்ளமையும் இங்கு மனங்கொளத் தக்கனவாகும்.

ஆசங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னுல் விளம்புந்தகையதோ

என அடியார் இயல்பாக இங்குக் கூறியதனே,

சிந்தையிடை யருஅன்பும் திருமேனி தனிலசைவும் கந்தைமிகையாங் கருத்தும் கையுழவாரப்படையும் வந்திழி கண்ணிர்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிர் வந்தனைய’

(பெரிய - சம்பந் - 270) எனத் திருநாவுக்கரசரது செயல் முறையில் வைத்து ஆசிரியர் விளக்கியுள்ளமை அறியத் தகுவதாகும்.