பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/909

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 爵懿

இளேயான்குடி என்ற ஊர் சோழநாட்டில் திருநள் ளாற்றுக்கு மேற்கே இரண்டு நாழிகை துரத்தில் உள்ளது என்றும், பத்தகுடி இருப்புப்பாதை திலையத்திலிருந்து முக்கால் நாழிகை தூரத்தில் இவ்வூரையடையலாம் என்றும் கூறு வர் சிலர். இவ்வூரில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. இந்நாயனர் புராணத்திற்குறிக்கப்பெறும் நாற்றங்கால் இக்கோயிலுக்குத் தெற்கில் உள்ளது. இதனை முளைவாரிக்குட்டை - முளைவாரி நாற்றங்கால் என அவ்வூர்மக்கள் வழங்குகின்ருர்கள். சோழமண்டல சதகமும் இளையான்குடி மாறனர் பிறந்ததலம் சோழ நாட்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவ்வாருகவும் தொண்டை மண்டல சதக ஆசிரியர் இளையன்குடி மாறஞர் வரலாற்றுப்பெருமை தொண்டை நாட்டிற்குரியதாகக் கூறுகின் ருர்.

இனி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமகுடிக்கு வட கிழக்கே ஏழு நாழிகை துரத்திலுள்ள இளையான்குடி என்ற ஊரே இந்நாயனரது ஊரென்றும், இவ்வூரில் முளைவாரிய முதளித்த நாற்றங்கால் என்ற பெயரால் ஒரு சருவமானிய நிலம் வழங்கப் பெறுகிற தென்றும், மாறன் என்பது பாண்டியர்க்குரிய பெயராய் அந்நாட்டிலுள்ளார்க்கு இடப்பெற்று வழங்கப்பெறுதல் பாண்டி நாட்டில் அவதரித்த திருமாலடியாராகிய நம்மாழ் வார் மாறன் என்னும் பெயருடையராகப் போற்றப் பெறுதலாற் புலனுமென்றும் கூறுவர் சிலர்.

திருத்தொண்டர்கள் திருவவதாரம் செய்தருளிய திருப்பதிகளுள் இன்ன இன்ன திருப்பதி இன்ன இன்ன நாட்டின் கண்ணது என அந்தந்த நாயனர் புராணத்தில் இடஞ்சுட்டி விளக்குதலே மரபாகக் கொண்ட சேக்கிழா ரடிகள், மாற நாயனர் பிறந்தருளிய இளையான்குடி என் னும் ஊர் இன்ன நாட்டின்கண் உள்ளது எனத் தெளி வாகக் குறிப்பிடாமையால் இவ்வூர் இதுதான் எனத் துணிந்துரைத்தற்கு இயலவில்லை.

இளையான் குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றியவர் மாறதாயஞர். ஏரின்மல்குவனத்தினுல் எல்லையில்லாத செல்வமும் சிவபெருமான்பால் நிறைந்த