பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

906 பன்னிரு திருமுறை வரலாறு

முற்பட்டார். அந்நிலையிற் புகழ்ச் சோழர், பெரியோர் செய்கை இருந்தவாறு இது. கெட்டேன் என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கையையும் பிடித்துக் கொண்டார்.

அப்பொழுது சிவபெருமான் திருவருளால், யாவரா லும் தொழத்தகும் பேரன்புடையவர்களே ! உமது திருத் தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப் புலப்படுத்தும் பொருட்டு இன்று வெகுளி மிக்க யானை பூக்குடலையைச் சிதறும்படி இறைவரருளால் நிகழ்ந்தது ' என்று அங்கு ஓர் அருள்வாக்கு எழுந்தது. அதனுடனே பாகர்களுடன் யானையும் உயிர்பெற் றெழுந்தது. எறிபத்தர் வாட் படையை நெகிழவிட்டுப் புகழ்ச் சோழர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினர். இருவரும் இறைவன் அருள்மொழியினை வியந்து போற்றினர். இறைவர் திருவருளால் சிவகாமியாண்டார க. பூக் கூடையில் முன்போல் தூய நறுமலர்கள் வந்து நிரம்பின. பாகர்கள் யானையை நடத்திக்கொண்டு மன்னரை யணுகினர். எறிபத்தர் புகழ்ச் சோழரை வணங்கி, அடியேன் உளங்களிப்ப இப்பட்டத்து யானைமேல் மகிழ்ந்து எழுந்தருளுதல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். புகழ்ச் சோழர் எறிபத்தரை வணங்கி யானை மேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை யடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங் கூடையைக் கொண்டு இறைவர்க்குத் திருமாலை தொடுத்தணிதல் வேண்டித் திருக்கோயிலை யடைந்தார். எறிபத்த நாயனுர் இவ்வாறு அடியார்களுக்கு இடர் நேரும்பொழுதெல்லாம் முற்பட்டுச் சென்று தமது அன்பின் மிக்க ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை யடைந்து சிவகணத் தார்க்குத் தலைவராக அமர்ந்தார்.

ஏளுதிநாத நாயனர் 'ஏகுதிநாதன்றன் அடியார்க்கும் அடியேன் எனப் போற்றப் பெற்ற இந்நாயனுக், சோழநாட்டில் எயின ஜாரிலே சான்ருர் குலத்தில் தோன்றியவர். தொன் மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலத்து நின்ற