பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 913

  • யானும் இவ்விளைப்புற்று எய்க்கும் இதுபெற வேண்டும்' என்ற உள்ளத்தராய்ச் சிவலிங்கத் திருமேனியிற் சேர்க்கப் பெற்ற பூங்கச்சினைத் தமது கழுத்திற் பூட்டி வருந்தி யிழுத்தார். அவரது வருத்தம் நீங்கத் திருப்பனந்தாள் இறைவர் சாய்வு நீங்கி நிமிர்ந்தருளினர். அது கண்டு மகிழ்ந்த கலயஞர், இறைவன் திருவருளைப் போற்றித் திருக்கடவூரையடைந்து தாம் மேற்கொண்ட திருப்பணி யினைச் செய்திருந்தார்.

அக்காலத்தில் ஆளுடைய பிள்ளையாரும் திருநாவுக் கரசரும் திருக்கடவூர்க்கு எழுந்தருளினர். குங்குலியக் கலயஞர் மாறிலா மகிழ்ச்சி பொங்க அவ்விரு பெருமக்களை யும் அடியார் திருக்கூட்டத்துடன் எதிர்கொண்டு போற்றித் தம் மனையில் திருவமுது செய்வித்து அவர்களது அருள் பெற்று மகிழ்ந்தார். பின்பு திருப்பணி பல புரிந்து சிவபத நீழலிற் சேர்ந்து இன்புற்ருர்.

மானக்கஞ்சாற நாயனர்

கஞ்சாறு என்னும் ஊரில் வேளாண் மரபில் அரசர் சேனுபதியாம் குடிவிளங்கத் தோன்றியவர் மானக் கஞ் சாறனர். மெய்ப்பொருளை அறிந்துணர்ந்த பெருஞ் செல்வராகிய இவர், சிவனடியார்க்கு ஏவல் செய்யும் இயல் பினராய், அடியார்கள் குறிப்பறிந்து அவர்கள் வேண்டுவன கொடுப்பவர். இவருக்கு இறைவனருளால் ஒரு பெண் மகவு பிறந்தது. அப்பெண் வளர்ந்து மனப்பருவம் எய்திய நிலையில் சிவநேசச் செல்வராகிய ஏயர்கோன் கலிக்காமளுர்க்கு மகட்பேசப் பெரியோர்கள் வந்தார்கள். வந்த மூதறிஞர்க்கு மானக் கஞ்சாறனர் தமது இசை வினைத் தெரிவித்தார். திருமணம் உறுதி செய்யப்பெற் றது. கஞ்சாறுாரில் மணநாளில் வெண்முனைப் பெய்து மன அணி செய்யப்பெற்றன. மணமகளுராகிய ஏயர் கோன் கலிக்காமர் மனமுரசியம்பக் கஞ்சாறு நகரின் அருகே வந்தனைந்தார்.

அந்நிலையில், சிவபெருமான் மானக்கஞ்சாறரது அடி

யார் பத்தியினைப் புலப்படுத்தத் திருவுளங்கொண்டு,

மாவிரத வேடமுடைய அடியவராகக் கஞ்சாறரது இல்லத்

58