பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/933

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 919

இந்நாட்டின் வேந்தராவார் " என்று கொண்டு பட்டத்து யானையை அருச்சித்து நீ இந்த நாட்டை ஆளுதற்குவல்ல ஒருவரை ஏந்திக்கொண்டுவா’ என்று சொல்லித் துணியினைக்கொண்டு கண்ணைக்கட்டி விடுத் தனர். அந்த யானை மதுரை நகர வீதிகளிலெல்லாம் திரிந்து சென்று திருவாலவாய்த் திருக்கோயிலின் கோபுர வாயிலின் முன் சென்றது. முதல் நாள் இரவில் ஆலவாயிறைவரது அருள் மொழியினைச் செவிமடுத்து மனத்துயரம் நீங்கியிருந்த மூர்த்தி நாயனுர், எம் பெருமானது திருவருள் இதுவானுல் இந்நாட்டினை யாளும் தொழிலை மேற்கொள்வேன் ' என்று திருக் கோயிற் புறத்திலே நின்ருர். யானையானது அவர் திரு முன்னே சென்று தாழ்ந்து அவரைத் தன் முதுகின்மேல் ஏற்றிக்கொண்டது. அதுகண்ட அமைச்சர்கள் மூர்த்தி யாரை வணங்கி யானையின் முதுகினின்றும் இறக்கி அழைத்துச் சென்று முடிசூட்டு விழாவிற்கு ஏற்றன செய்யத் தொடங்கிஞர்கள். அதுகண்ட மூர்த்தியார் அமைச்சர்களை நோக்கி அமண் சமயம் நீங்கிச் சைவம் ஓங்கில் இந்நாட்டினை அரசு புரிதற்கு உடன்படுவேன் என்று கூறிஞர். அமைச்சர்களும் அவரது ஆணைக்கு இசைந்து நடப்பதாகக் கூறி வணங்கி நின்ருர்கள். பின்பு மூர்த்திநாயனர் அமைச்சர்களை நோக்கி யான் அரசு புரிவேன கில் திருநீறே எனக்குச் செய்யும் அபிடேகத்திரவியமாகவும் உருத்திராக்கமே பூனும் அணிகலமாகவும் சடைமுடியே மணிமுடியாகவும் ஆதல் வேண்டும் ' என்று கூற, அமைச்சர்களும் அவர் கருத்திற் கிசைந்து முடி சூட்டு விழாவுக்கு ஆவன செய்தார்கள். நற்றவ வேந்தராகிய மூர்த்தியார், திருவாலவாயிறை வரைச் சென்று வணங்கி யானைமீது உலாப் போந்து நிலவுந்திருநீற்று தெறித்துறை நீடுவாழ உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து விளங்கத் திருநீறு கண்டிகை சடைமுடி ஆகிய மூவகைச் சிவ சின்னங்களுடன் தவ வேந்தராகப் பாண்டி நாட்டினை அருள் ஆட்சி புரிந் திருந்து பின்னர் இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுடனுறையும் பெருவாழ்வு பெற்ருர். இங்கனம் மூர்த்தி நாயனுராகிய இப்பெருந்தகையார், திருநீறு கண்டிகை சடை முடியாகிய மூவகைச் சிவசின்னங்களுடன் அரசு புரிந்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்