பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 92.1

எனவும் ஆளுடைய பிள்ளையார் உளமுவந்து பாராட்டிப் போற்றியுள்ளார். முருக நாயனர் திருமடத்தில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீல நக்கர் முதலிய சிவனடியார்கள் பலரும் விரும்பி மகிழ்ந்து உரையாடி உளங்கலந்துறையும் பெரு வாழ்வினைப் பெற்றனர் எனவும், திருஞானசம்பந்தருக்கு நண்பராம் பெருமை பெற்ற முருகநாயஞர், திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குத் திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமண விழாவிற் கலந்து கொண்டு தங்கள் பெருமானடி நீழல் தலையாம் நிலைமை சார்வுற்ருர் எனவும் பெரிய புராணம் கூறும்.

உருத்திர பசுபதி காயஞர்

இவர் சோழ நாட்டில் திருத்தலையூரில் வேதியர் மரபிலே தோன்றியவர் ; சிவபெருமான் திருவடிகளிலே நிறைந்த அன்பினையே தமக்குச் செல்வமாகக் கொண்டவர்; பசுபதியார் என்னும் இயற்பெயருடையவர். இவர் தாமரைத்தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலை மேலேறக் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறைப் பயணுகிய திருவுருத்திரத்தை வழுவாது ஒதும் நியதியுடைய ராயிருந்தமையால் உருத்திர பசுபதியார் எனப் போற்றப் பெற்ருர். இவர்தம் அருந்தவப் பெருமையையும் வேத மந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந் நாயனுர்க்குத் தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கி யருளிஞர்.

திருகாளைப் போவார் நாயனர்

நந்தனுர் என்னும் பெயருடைய இந்நாயனர், மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையில் உள்ள ஆதனூர் 1 என்னும் பகுதியில் புலையர் குலத்திலே தோன்றியவர் ; மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வோடும் வந்தவர்; அப்பகுதியில் ஊர்ப்புலைமை ஆன்ற தொழில்

1. ஆதனுர் என்பது சிதம்பரத்தை யடுத்துள்ள ஒமாம் புலியூர்க்கும் கடம்பூர்க்கும் நடுவில் கொள்ளிடக்கரையில் அமைந்த ஊராகும்,