பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924 பன்னிரு திருமுறை வரலாது

திருவருளால் உமக்கு வேள்வித்தீ அமைத்துத் தருதல் வேண்டி இங்கு வந்தோம்’ என்ருர்கள். அது கேட்ட நந்தனர் நான் உய்ந்தேன்’ என வணங்கினர். தெய்வ மறை முனிவர்களும் தென் திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள். நாளைப் போவார் அத்தீக்குழியினையடைந்து இறைவன் திருவடிகளை மனத் திற்கொண்டு எரிசூழ வலங்கொண்டு ஆடல் புரிந்தருளும் திருவடியை நினைந்து கை தொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் மெய்யில் வெண்ணுரல் விளங்க வேணிமுடிகொண்டு மேலே எழுந்து செம்மலர் மேல் வந்தெழுந்த அந்தணனாகிய பிரமனை யொத்துத் தோன்றினர். அது கண்டு தில்லைவாழந்தணர்கள் கைதொழுதார்கள். திருத்தொண்டர்கள் வணங்கி மனங் களித்தார்கள். வேள்வித்தீயின் மூழ்கி வெளிப்பட்ட திருநாளைப் போவராம் மறைமுனிவர் அருமறைசூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க வருபவர் தில்லைவா ழந்தணர் உடன் செல்லத் திருக்கோயிற் கோபுரத்தைத் தொழுது உள்ளே புகுந்தார். உலகுய்ய நடமாடும் எல்லே யினைத் தலைப்பட்டார். உடன் வந்தோர் யாவரும் அவரைக் காணுதவராயினர். நாளைப் போவார் அம்பலவர் திரு வடியிற் கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழ் அந்த னர்கள் அதிசயித்தார்கள். முனிவர்கள் துதித்துப் போற்றினர்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய நந்த ஞரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமிலா ஆனந்தப் பெருங் கூத்தர் அருள்புரிந்தார்.

நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன்

தாவினுக் கரையன் நானேப் போவானும் ... . . குற்றஞ் செய்யினுங் குணமெனக்கருதும்

கொள்கைகண்டு நின் குரைகழல டைந்தேன்'

ETSFT நம்பியாரூரர் திருப்புன்கூர்ப் பெருமானைப் போற்றும் பாடலில் நாளைப்போவார் இறைவன் பாற் கொண்ட குற்ற மிலாப் பேரன்பின் திறத்தை உள முவந்து போற்றியுள்ளமை இங்கு நினைத்தற்குரிய தாகும்.