பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/952

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

936

பன்னிரு திருமுறை வரலாறு


எடுத்தருளினர். அப்பூதியடிகள் வறியோர் பெருஞ்செல்வம் பெற்ருற்போன்று மகிழ்ந்து ஆடிப்பாடினர் ; வீட்டினுள்ளே புக்கு மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்க்குத் திருநாவுக் கரசரின் வருகையுரைத்து அரசரை உள்ளே அழைத்துச் சென்று அவர் திருவடிகளை விளக்கிய திருவடி நீரை உள்ளும் புறம்புந்தெளித்து உளமகிழ்ந்தார் ; தேசமுய்ய வந்த திருநாவுக்கரசரைத் தம் மனையில் திருவமுது செய் தருளவேண்ட அரசரும் அதற்கு இசைந்தார். அப்பூதி யாரும் அவர்தம் மனே வியாரும் அரசர் அமுது செய்யும் பேறுபெற்ருேம் என்னும் உவகையுடன் திருவமுதமைத்து மூத்த திருநாவுக்கரசை வாழைக்குருத்தரிந்து வரும் பொருட்டு அனுப்ப, அவர் விரைந்து தோட்டத்துட் சென்று இலையினை அரியும்பொழுது, ஒரு பாம்பு அவரைத் தீண்டி அவரது கையிலே சுற்றிக்கொண்டது. மூத்த திருதாவுக் கரசு அதனை உதறி வீழ்த்திவிட்டு விட வேகம் தலைக் கேறுவதன் முன் விரைந்து ஓடி வாழையிலையினைத் தாயிடம் தந்து கீழே வீழ்ந்து இறந்தார். அடியார் திருவமுது செய்யத் தாழ்த்தல் கூடாதென்றெண்ணிய பெற்ருேர், மைந்தனது உடம்பினை வீட்டுப்புறத்தில் பாயில் மறைத்து வைத்து விட்டுத் திருநாவுக்கரசரை அமுது செய்ய அழைக்க, அரசரும் இசைந்து ஆசனத்திலமர்ந்து திருநீறளிக்கும் பொழுது, மூத்த திருநாவுக்கரசைக் காணுது அவனை அழையும்’ என்ருர். அது கேட்ட அப் பூதியார் அவன் இங்கு இப்போது உதவான் என்ருர், அந்நிலையில் இறைவரருளால் நாவுக்கரசர் திருவுள்ளத்தே ஒரு தடுமாற்றம் தோன்ற, அரசர் அப்பூதியாரை நோக்கி, அவன் என் செய்தான்? உண்மையைச் சொல்வீராக என்ருர். அவரும் அஞ்சி நடுங்கி நிகழ்ந்தது கூறினுர். அது கேட்ட நாவுக்கரசர் நன்று நீர் புரிந்த வண்ணம், யாவர் இத்தன்மை செய்வார்?' என்று எழுந்து சென்று மூத்த திருநாவுக்கரசின் உயிர் நீங்கிய உடம்பினை நோக்கி இறைவன் அருள்புரியும் வண்ணம் ஒன்று கொலாம்' என்னும் திருப்பதிகம் பாடி விடந் தீர்த்தருளினர். அந் நிலையில் உறக்கம் நீங்கி எழுவானைப் போன்று உயிர் பெற்றெழுந்த மூத்த திருநாவுக்கரசு, திருநாவுக்கரசு நாயனர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கின்ை. திருநாவுக் கரசர் திருநீறளித்தருளினர். அப்பூதி நாயனுரும் அவர் மனைவியாரும் தம் மைந்தன் உயிர் பெற்றெழுந்தமை