பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

950

பன்னிரு திருமுறை வரலாறு


துணிந்து அதனையே தாம் செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்துவந்தார்.

ஒரு நாள் சாக்கியர் அச் செயலை மறந்து உண்ணப் புகுந்த போது இன்று எம்பெருமானைக் கல்லால் எறிய மறந்து விட்டேனே' என்று எழுந்து விரைந்தோடிச் சிவலிங்கத்தின் திருமுன் சென்று ஆராத வேட்கையினுல் ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் நெடு விசும்பில் விடை மீது உமையம்மையாருடன் தோன்றியருளினர். அத் தெய்வக் காட்சியைக் கண்ட சாக்கிய நாயனுர், தலைமேல் இரு கைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சிஞர். சிவபெருமான் சிவலோகத்தில் தம் பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளி எழுந்தருளினர். வார் கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் என நம்பியாரூரர் சாக்கியஞர் செயலைக் குறித்துப் போற்றி யுள்ளார். சாக்கியர் தம்மீது எறிந்த சல்லிகளைச் சிவபெருமான் நறுமலர்களாக ஏற்றருளிய திறத்தை,

  • புத்தன் மறவாதோடி, எறிசல்லி புதுமலர்களாக்கிளுள்

காண் (5-52-8) எனவும், கஞ்சி உண்பதன் முன் கல்லெறிந்து வழிபட்ட சாக்கிய நாயனுர்க்கு இறைவன் வீடு பேறருளியதிறத்தை கல்லிளுலெறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியகுள் நெல்லிஞர் சோறுளுமே நீள்விகம் பாள வைத்தார் .

(4-49-6)

ஒனவும் திருநாவுக்கரசர் உளமுவந்து போற்றியுள்ளமை

ங்கு நினைக்கத் தகுவதாகும்.

சிறப்புலி காயஞர்

பொன்னி நன் ட்ைடில் இன்மையாற் சென்றிரந் தார்க்கு இல்லையென்னது ஈந்து உவக்கும் தன்மையார் . வாழும் திரு ஆக்கூரிலே அந்தணர் குலத்திலே தோன்றியவர் சிறப்புலி நாயனர். சீர் கொண்ட புகழ் வள்ளல் எனச் சிறப்பிக்கப் பெற்ற இப்பெருத்தகையார், சிவனடியார்கள்பாற் பேரன்புடையராய் அடியார்கனே