பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/974

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958

பன்னிரு திருமுறை வரலாறு


வந்தமைந்தனை அழைத்துக்கொண்டு அடியாரை அமுது செய்வித்தற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் முன்னமே மறைந்தருளிய பயிரவக்கோலத் தொண்டரைக் காணுதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார் ; மனஞ் சுழன் ருர். வெந்த இறைச்சிக் கறியமுதினையும் கலத்திற் காணுது வெருவுற்ருர். செய்ய மேனிக் கருங் குஞ்சிச் செழுங் கஞ்சுகத்துப் பயிரவர் யாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே? எனத் தேடி மயக்கங் கொண்டு புறத்திற் சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும் முருகளுகிய குழந்தையுடனும் விடைமீதமர்ந்து இனிய கறியும் திரு வமுதும் அமைத்தார்காண எழுந்தருளித் திருவருள் நோக்கம் செய்தருளிஞர். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும் அவர் மனைவியாரும் மைந்தரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும் மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றிஞர்கள். சிவபெருமானும் உமாதேவியாரும் முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர் அவர் மனைவியார் மகளுர் தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினர்.

சிவனடியார்கள் செய்கின்ற செயல்களை மெல்வினை என்றும் வல்வினையென்றும் இருதிறனுகப் பகுத்துரைப்பர் சான்ருேர், இறைவனை வழிபடுதற்கு உலகத்தாச் எல்லோராலும் மேற்கொள்ளத் தக்க அன்பின் வழிப்பட்ட செயல் முறைகள் மெல்வினை எனப்படும். இறைவன் பால் அன்பின் ஊற்றத்தால் தம்மை மறந்து செய்யும் அரிய செயல்கள் வல்வினை எனப்படும். இவ்விரண்டினையும் முறையே பத்தி வைராக்கியம் எனவும் வழங்குதலுண்டு. வரங்கள் தரும் பயிரவ வேடத்தைப் பூண்ட சிவபெருமா னுக்குக் கறியமுது சமைக்கும் பொருட்டு இளங்குழந்தை என்று இரங்காமல் சிறுத்தொண்டரும் வெண்காட்டு நங்கையும் ஆகிய தந்தை தாய் இருவரும் தங்கள் கையி ஞலே பிள்ளையை யறுத்து அடியார்க்கு அமுதாக்கிய இச் செயல், மேற்குறித்த வல்வினையின் பாற்படும். இந்நுட்பம்,

வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்

கரங்களினல் அன்று கறியாக்க - இரங்காதே