பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/979

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 963

முடிபுனைவீராக ' என்று செந்தீவளர்க்கும்படி செய்து திருநீற்றினையணிந்து சடைத்தலையினை ஒரு பொற்கலத் தில் ஏந்தித் தம் முடியிலே தாங்கிகொண்டு தீயினை வலம் வந்து திருவைந்தெழுத்தோதி அத்தீயினுள்ளே புகுந்து இறைவன் திருவடிநிழற்கீழ் அமர்ந்திருந்தார். இச்செய்தி

  • பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கடியேன். ' எனவருந் திருத்தொண்டத் தொகையிற் குறிக்கப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

கரசிங்கமுனையரைய காயனர்

நீதிமுறை வழுவாது அரசு புரியும் முனையரையர் குடியிற் பிறந்து திருமுனைப்பாடி நாட்டினைத் திருநாவ லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் நரசிங்க முனையரையர். இவர் பகைவரைப் போரிற் புறங்கொண்ட பெருவீரர் ; சிவனடியார் அடிபணிதலையே அரும்பெரும் பேறெனக் கொண்டவர்; சிவபெருமான் திருக்கோயில் தோறும் திருச்செல்வம் பெருகத் திருத்தொண்டுகள் பல புரிந்தவர். திருவாதிரை நாள்தோறும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்கட்குத் தனித்தனியே நூறு பொன் கொடுத்து வந்தார். அவ்வாறு கொடுத்துவரும் நாளில் ஒருநாள் தூர்த்த வேடமுடைய ஒருவர் திருநீறு அணிந்து அடியார் குழுவிற் சேர்ந்து கொண்டார். அவருடைய துர்த்த வேடத்தைக் கண்டு அருகே நின்றவர்கள் இகழ்ந்து ஒதுங்கினர். அதுகண்ட நரசிங்க முனையரையர் அவ்வடியாரை எதிர்சென்று வணங்கி அழைத்துக் கொண்டுபோய் நன்ருக உபசரித்தார். சீலமில்லாதவர்களேயாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகத்தார் இகழ்ந்து நரகத்தில் வீழாதபடி அவ்வடி யார்க்கு இருநூறு பொன் கொடுத்து அவரை வணங்கி இன்மொழி பகர்ந்து விடை கொடுத்து அனுப்பினர். இவ்வாறு செவ்விய அன்பினில் திருத்தொண்டுகள் பல புரிந்து திருந்திய சிந்தையராகிய நரசிங்கமுனையரையர் சிவ பெருமான் திருவடி நீழலையடைந்து மீளாத நிலைபெற்ருர்.

இவர் நம்பியாரூரரை மகன்மை முறையிற் பெற்று வளர்த்தமை முன்னர்க் கூறப்பட்டது.