பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - பரிபாடல் மூலமும் உரையும் வெற்றிகொள்ளும் கதியைக் கொண்ட போர்க்குதிரை களைப் போல, அவர்களும் இடசாரி வலசாரியாகச் சுழன்றும் போரிட்டனர். தேருக்கு அழகுசெய்யும் அழகிய கயிற்றைப் பற்றும் முறை தெரிந்து பற்ற வருவாரைப் போல, ஒருவர் சடையினை ஒருவர் பற்றி இழுத்தும் போரிட்டனர். கட்டம்ைந்த வில்லினை வளைப்பதற்காக மார்புறத் தாங்கி வளைப்பதைப் போல, ஒருவர் மற்றவர் உடலைத் தாங்கி வளைத்தும சிதைக்க முற்பட்டனர்; ஒருவர் கண்களாகிய வாளிகள் பிறரது கணள்களாகிய அம்புகள் மேல் நிலையிட்டு நிறிகுமாறு சினந்தும் நோக்கினர். தோள்வளைகளைக் கழற்றிச் சக்கரப் படைபோலச் சுழற்றி எறிந்தும் போரிட்டனர். - - - மென்மைத் தன்மை வாய்ந்த மயிலின் சாயலைக் கொண்ட வரான அத் தோழிமார், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிடலாயினர். - - சொற்பொருள் : பிணக்கல் - மாட்டியிழுத்தல். மத்திகை - சாட்டை நொசி - நுண்மை. நூழில் - நெருங்கிப் போரிடல், ப்ரி - குதிரையோட்டத்தின் கதி. மார்க்கம் - நடை வரிசிலை - கட்டமைந்த வில் வாளி அன்பு: ஆழி - சக்கரம் . . . குறவர்க்கு வெற்றி! வாள்மிகு வயமொய்ம்பின் - வரையகலத்தவனை வானவன்மகள் மாணெ Nல் மலருண்கண் . . . மடமொழியவர் உடன்சுற்றிக் - 60 கடிசுனையுள் குளித்தாடுநரும் அறையணிந்த அருஞ்சுனையான் நறவுண்வணடாய் நரம்புளர்நரும் சிகைமயிலாய்த் தொகைவிரித்தாடுநரும் கோகுலமாய்க் கூவுநரும் . 65 ஆகுலம் ஆகுநரும் - - குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர் வித்தகத் தும்பை விளைத்தலான்; வென்வேலாற்கு ஒத்தன்று தண்பரங் குன்று; - . ஒளிமிக்கதும், வெற்றிதரும் ஆற்றலுடையதும், மலை போன்றதுமான் மார்பினைக் கொண்டோனான முருகப் பிரானையும், வானவர்கோமானின் மகளாகிய தேவானைப் பிராட்டியையும், மிக்க எழிலையுடைய மையுண்ட குவளை மலரைப் போன்ற கண்களையும், மடப்பம் பொருந்திய பேச்சினையும் உடையவரான, வள்ளிநாயகியின் தோழிமார் ஒருங்கே சுற்றி வளைத்துக் கொண்டனர். - -