பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பரிபாடல் மூலமும் ചങ്ങു வானவர் மகளிருட் பாடல்பயின்றவரைப் பாணர் மகளிர்கள் தம் பாட்டால் வெற்றி கொண்ட்னர். இவ்வாறு, ஒவ்வொரு கலையினும் வல்லவர், அவ்வக்கலையில் வல்லவரான தேவானைப் பிராட்டியின் சுற்றத்தாரோடு போரிட்டு வென்றனர். கலைவல்லார் அல்லாரான பிறரை, அவ்வாறே கல்ைவல்லார் அல்லாரான குன்றவர் போரிட்டு வென்றனர். இவ்வாறு எப்புறமும் போரென்னும் ஒரே சொல்லாகவே பரந்தது. செம்மையான புதுப்புனலை ஏற்றுள்ள தடாகத்தோடு மாறுபடட்ாற்போல விளங்கிய தண்ணிய சுனையின் பக்கத்தே, வள்ளிநாயகியின் வெற்றிக்கொடியும் நின்று நிலைபெற்று. சொற்பொருள் : சூர் - சூரன். கடுஞ்சூர் மா' - எனக் கொண்டு, கொடிய அச்சத்தை விளைக்கும் மாமரம் எனவும் கொள்ளுக. அடும் - பகையை அழிக்கும். செம்மை - சிவப்பாம் தன்மை. தடாகம் - பொய்கை. பாடாகை - கொடி நாள்தொறும் சிறப்பாக மேஎ எஃகினவை; - வென்றுயர்ந்தகொடி விறல்சான்றவை ; 80 கற்பிணைநெறியூடு அற்பிணைக்கிழமை நயத்தகுமரபின் வியத்தகுகுமர! - வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துதுந்தலை நினை யாம் நயத்தலிற் சிறந்தஎம் அடியுறை - . பயத்தலிற் சிறக்க நாள்தொறும் பொலிந்தே! 85 அன்பரால் விரும்பத்தகுந்த வேற்படையினை உடை யோனே! இவ்வாறு வள்ளிநாயகியின் சுற்றத்தார், தாம் எதிரிகளான வானவன் மகளின் சுற்றத்தாரை வெற்றி கொண்டு உயர்த்த கொடியனது, அவர்தம் வெற்றியாற்றலுக்குச் சான்று பகரும். கற்பு மணத்தாலே ஒன்றுபடுதல் என்கின்ற வட்புலத்து ஒழுக்கத்தோடு, கலந்த அன்பினாலே ஒன்றுபடுதல் என்னும் உரிமையினையும் விருப்புடன் ஏற்று விளங்கும் பண்பினை யுடைய, வியக்கத்தக்க குமரப் பெருமானே! - யாம் விரும்புதலினாலே நாளுக்குநாள் சிறப்புற்ற எம் அடியுறை வாழ்வானது. நீதான் எமக்கு அருளிச் செய்தலினாலே, நாள்தோறும் மேலும் அழகுபெற்றுச் சிறப்படையுமாறு, நின் அடிகளில் எம் தலைகளைத் தாழ்த்தினேமாய், யாம் நின்னை வாழ்த்தினேம்! நின் புகழினைப் பாடினேம் எமக்கும் அருள்புரிக, பெருமானே! - - ! . . சொற்பொருள் : மேஏ விரும்பும். எஃகு வேல். விறல் - வெற்றி. அடியுறை - அடியவராக வாழும் வாழ்வு. பயத்தல் - அருளுதல், பயத்தலின் அருளுதலினால், - -