பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பரிபாடல் மூலமும் உரையும் மாமலி ஊர்வோர் வயப்பிடி உந்துவோர் வீமலி கான்யாற்றின் துருத்தி குறுகித் 30 தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவெதிராது யாமக் குறையூடல் இன்னசைத் தேனுகர்வோர் காமக் கணிச்சியால் கையறவு வட்டித்துச் சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர் தாம்வேண்டு காதற் கணவர் எதிர்ப்படப் 35 பூமேம்பா டுற்ற புனைகரும்பிற் சேம - - மடநடைப் பாட்டியர்த் தப்பித் தடையிறந்து தாய்வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார் போல் . - யாம் வேண்டும் வையைப் புனலெதிர்கொள் கூடல், 40 கரையை அடைந்தாருட் சிலர் பொங்கிவரும் புதுவெள்ளத் தின் அழகைக் கண்டு இன்புற்றனர். வரிசையாக நீரணி மாடங் களில் ஊர்ந்து சென்றனர் சிலர். ப்ேரணியாக அணி வகுத்து நின்றனர் சிலர். பெரும் பூசலிட்டு ஒருவரையொருவர் நீரால் தாக்கியபடி ஆடினர் சிலர். குதிரைகள் மீதேறி ஆற்றுநீருட்' செலுத்திச் சென்றனர். சிலர். இளைய பிடிகளின் மீது அமர்ந்து அவற்றைச் செலுத்தினர் சில்ர். பூக்கள் மலிந்த காட்டாற்றின் திட்டுக்களை அடைந்து, அவ்விடத்தே, தாம் விரும்பும் காதலரது மார்பைத் தழுவிக் கொண்டிருந்தனர் சிலர் காதலரது தழுவலுக்கு எதிரேற்று இசையாது, யாமத்துக் கழிந்த குறைப்பட்ட ஊடலாகிய விரும்பத்தக்க இனிய தேனைப் பருகி நின்றனர் சிலர். காமவிருப்பமெனும் கோடரியாலே செயலற்றிருக்கும் தம் ஊடல் நிலையைச் சுழற்றி எறிந்துவிட்டுக் காவலாகிய திரையை இட்டுத், தம் கணவருடனே மலரமளியிற் சென்று கூடிக் களித்தனர் சிலர். - ' - தாம் விரும்பிய காதலையுடைய கணவர் எதிர்ப்பட்ட விடத்து, மேன்மை பொருந்திய பூவினைத் தானாகவே விரும்பிச் சென்றடைகின்ற அழகிய வண்டினைப் போலத், தமக்குக் காவலாக அமைந்த தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பிச் சென்று, பிற தடைகளையும் கடந்துசென்று, தாம் செல்வதற்கு விரும்பும் பட்டினத்தை அடைந்து கரையினைச் சேரும் காவல் பொருந்திய கப்பலின் வரவினை ஆவலோடு எதிர்கொள்ளும் வணிகரைப்போல, அத்துணை மகிழ்வோடு எதிர்கொண்டு வரவேற்று இன்புற்றனர். இவ்வாறாக யாம் அனைவரும் எதிர் கொள விரும்பும் வையைப் புதுப்புனலையும் கூடல் நகரம் எதிர் கொண்டுள்ளது. - - சொற்பொருள் : மாடம் நீரணிமாடம் என்னும் மேற் கட்டியமைந்த ஒருவகை ஒடம்.மாமலி- குதிரைத் திரள் வயப்பிடி