பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பரிபாடல் மூலமும் உரையும் படியே நின்றனர். வையையே! நினக்கு அந்த அவியுணவும் 'பொருத்தமாவதே - - - ... " சுவடி தூக்கி யாடும் இளஞ்சிறுவரின் விளையாட்டிற்கு மாறுபட்டு எழுந்து, தாமும் பொய்யான பல விளையாட்டுக் களை அக் கன்னியர் ஆடுவர். அவர் அவ்வாறு பொய்யாகக் கணவன் மனைவி எனத் தம்முட்கொண்டு ஆடுதல்தான், அவர வரை ஒன்றுபடுத்தும் முன்னைத் தவமுயற்சியால் வருவதோ..? அவரவரும் தீயெரிப்பதாலும், செறிந்த நோன்பாலும் முன்ன்ர் நின்னை வேண்டித் தவமிருந்ததனால் அத்தொடர்பு ஏற்பட்ட தோ? இவ்வாறு, தம் தாயாரின் அருகே நின்று அக்கன்னியர் தவமாகிய தைந்நீராடலை மேற்கொள்ளல் எதன்பொருட் டாகவோ? வையை நதியே! நீதான் இதனைக் கூறுவாயாக! - சொற்பொருள் : கனைக்கும் முழக்கமிடும். அதிர்குரல் விட்டொலிக்கும் குரல். கார் - மேகம் பைதல் துன்பம் விதலை - நடுக்கம்.நளி-குளிர்ச்சி. மறு களங்கம். ஆதிரை ஆதிரை நாள். விழவு திருவாதிரை விழா புரி முப்புரி அம்பா ஆடல் - தைந்நீர் ஆடல், இது தமக்கு நல்ல கணவரைத் தரவேண்டிக் கன்னியர் ஆடுவது. முனித்துறை முதல்வியர் - மணச்சடங்கினைச் செய்தற்கு அறிந்த முதுபெண்டிர் சிறை - கரை. நெறி - ஒழுங்கு. நிமிர்தல் - உயர்ந்தெழல், நுடக்கம் - வளைவு. தையல் - அழகு. ஈரளி - ஈரமான உடை மடை - அவியுணவு மையாடல் - கவடி ஏந்தல். பொய்யாடல் - புனைந்தாடல். தீயெரிப்பு - அழலை மூட்டுதல், தவம் - முன்னைத் தவம். - விளக்கம்: கன்னியர் தைந்நீராடிநோன்பு பூண்டனர்; அதன் பயனாகப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் உறவின்படி தமக்குரிய காதற்கணவரை அடைவர் என்பதாம். இதனை அவர்க்குத் தருவது வையைத் தெய்வம் என்பதுமாம். - கண்ணி தொடுத்தாள் ஆயிடை, மாயிதழ் கொண்டோர் மடமாதர் நோக்கினாள் வேயெழில் வென்று வெறுத்ததோள் நோக்கிச் சாய்குழை பிண்டித் தளிர்காதில் தையினாள் 95 பாய்குழை நீலம் பகலாகத் தையினான் - குவளை குழைக்காதின் கோலச் செவியின் இவள்செரீஇ நான்கு விழிபடைத்தாளென்று நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே • கொற்றவை கோலங் கொண்டோர் பெண்; 100 பவள வளைசெறித்தாள் கண்டணிந்தாள் பச்சைக் . குவளைப் பசுந்தண்டு கொண்டு; கல்லகா ரப்பூவால் கண்ணி தொடுத்தாளை